கூடா ஒழுக்கம்!
புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:17 PM
அறத்துப்பால் - அதிகாரம் 28 - பாடல் 7
புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
- திருக்குறள்
குன்றிமணியைப் போலவே
பளபளப்பாய்த் தோன்றுவார்
குன்றிமணியின் மூக்கைப் போல்
கரிய நெஞ்சம் கொண்டிருப்பார்
Advertisement
புறத்தில் பெருமை தோன்றிட
அகத்தில் குன்றி வாழ்வது
சிறுமையான வாழ்வுதான்
சிறப்பில்லாத வாழ்க்கையே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்