சிறுவர்மணி

வேவு பார்க்கும் சோலார் ஆர்பிட்டர்!

DIN

லண்டனில் சோலார் ஆர்பிட்டர் என்ற விண்கலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த விண்கலம் அமெரிக்காவில் கேப் கெனரவால், ஃப்ளோரிடா' விலிருந்து 2020 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 - ஆம் தேதி சூரியனை நோக்கிப் புறப்பட்டது!

சூரியனிலிருந்து புறப்படும் காந்த அலைகள் மின்சாரக் கருவிகளையும், மொபைல் போன் முதலியவற்றையும் பாதிக்கிறது. இவ்வகை பாதிப்புகளின்காரணங்களையும், மேலும் சில தகவல்களையும் சேர்ப்பது இந்த சோலார் ஆர்பிட்டரின் குறிக்கோளாம்!

சூரியனை நெருங்க இரண்டு ஆண்டுகள் பிடிக்கும். மிகவும் அருகில் போகாமல் எட்ட நின்று ஆராய்ந்து தகவல்களைச் சேகரிக்கும்! (பின்னே?.... சூரியன் பக்கத்திலெல்லாம் போகமுடியுமா என்ன?) இந்த ஆர்பிட்டர் புதன் கிரகத்துக்கு முன்னால் போய்ச் சுற்றும்!

சூரியனில் வீசும் காந்தப் புயல்களை இது ஆராயும்! நல்ல புகைப்படங்களை நமக்கு அனுப்பும். சூரியனுக்கு 2.6 கோடி மைல் அருகில் செல்லும். 

அப்போது அதிபயங்கர அனல் வீசும்! 500 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கும் டைட்டானியம் பூச்சு இந்த விண்கலத்தின் மீது பூசப்பட்டிருக்கிறது! 
ஏற்கெனவே நாசா ஒரு விண்கலத்தை சூரியனுக்கு அனுப்பி இருக்கிறது. அது புறப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டன.

தொகுத்தவர் : கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT