சிறுவர்மணி

சிலந்தியும் கழுகும்!

எஸ்.திருமலை

ஒரு கழுகு பறந்து சென்று உயரமான மலையின் உச்சியில் அமர்ந்தது. அந்த மலையுச்சியில் அது அமர்ந்ததும் அதன் பக்கத்திலேயே ஒரு சிலந்தி ஊர்ந்து செல்வதைக் கண்டது. இவ்வளவு உயரத்தில் எப்படி இந்த சிலந்தி வந்தது என்று ஆச்சரியப்பட்டது கழுகு.

கழுகு சிலந்தியைப் பார்த்து,  ""நண்பா!.... எப்படி இவ்வளவு உயரமான இடத்திற்கு வந்தாய்?'' என்று கேட்டது.

""நீ பறந்து வந்தபோது நான் பின்னிய வலை உன் காலில் ஒட்டிக்கொண்டது!....அந்த வலை நூலில் ஒட்டிக்கொண்டு இங்கு வந்துவிட்டேன்....'' 

""அப்படியா?'' என்றது கழுகு.

சிலந்திக்கு கர்வம் தாங்க முடியவில்லை.... அது கழுகிடம், ""இப்போது பார்!..... நீ எவ்வளவு சிரமப்பட்டு வந்த இந்த இடத்தை நான் எவ்வளவு எளிதாக வந்தடைந்து விட்டேன் பார்!...''  என்று மார் தட்டியது.

அப்போது பலத்த காற்று வீசியது! சிலந்தி அந்தக் காற்றில் தடுமாறி மலை உச்சியிலிருந்து கீழே அதள பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT