முகப்பு
சிறுவர்மணி

கடி

""அம்மா ஆன்லைன் கிளாஸ் முடிஞ்சு போச்சு ! ....''""சரி,.... அடுத்தது ஆன்லைன் டியூஷன் கிளாஸ் ஆரம்பிக்க போகுது போய் உட்காரு!'' 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:18 PM
பகிர்:

""அம்மா ஆன்லைன் கிளாஸ் முடிஞ்சு போச்சு ! ....''
""சரி,.... அடுத்தது ஆன்லைன் டியூஷன் கிளாஸ் ஆரம்பிக்க போகுது போய் உட்காரு!'' 

பொ.பாலாஜிகணேஷ், சிதம்பரம் - 608002 


""அருவிலே தண்ணி நிறைய கொட்டுதுன்னு சொன்னாங்க இங்க வந்து பார்த்தால் தண்ணி கொஞ்சமாத்தான் வருது!...''
""...."ஃபால்ஸ்'  நியூஸாப் போச்சா?''

கி.சரஸ்வதி, ஈரோடு - 638012 


""தினமும் விடியற்காலையில சேவல்  
எப்படி   கூவுது?''
""விடியற்காலைன்னு இல்ல...., எப்பவுமே சேவல், ‘கொக்கரக்கோ, ன்னு தான் கூவும்!''

வி. ரேவதி, தஞ்சை - 613 007




""அவரோட தம்பி பேரு "கோபம்' னு நெனைக்கிறேன்!''
"" அப்படிக் கூடவா பெயர் வெப்பாங்க ?.... எப்படிச் சொல்றே?''
""தெரியலே,.... அவரு யாரு கிட்டேயோ "கோபம் என் கூடப் பிறந்தது" ன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு!''

எம்.அசோக்ராஜா, திருச்சி-620015


""பட்சணத்தைத் திருடி இவங்க ரெண்டு பேரும் பங்கு போட்டுத் தின்னுட்டாங்களாம்!''
""அப்போ, ‘பாவப்பிரிவினை‘ ன்னு சொல்லு!!''

இர.கிருத்திக்குமார், நெய்வேலி - 607803.

""அம்மாவும் அப்பாவும் வெளியிலே போனாங்க....  அம்மா பாதசாரியாப் போனாங்க....''
"" அப்பா?''
""பாத வேட்டியாப் போனாங்க!''

ஆர்.அஸ்வின் குமார், கோயம்புத்தூர் - 641023.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.