கடி
""என்னது உங்க சேவல் விசிலடிக்குது?""அதுவா?.... அது விசிலை வாயிலே கொத்திக்கிச்சு!....''
""என்னது உங்க சேவல் விசிலடிக்குது?
""அதுவா?.... அது விசிலை வாயிலே கொத்திக்கிச்சு!....''
ஆர்.எம். ஸ்ரீஅக்ஷயராம்,
திருநெல்வேலி டவுன்.
""எங்ககிட்டே ரெண்டு பசுமாடு இருக்கு!.... ரெண்டுமே நல்லா பால் கறக்கும்!''
""ஆச்சரியமா இருக்குடா!..... ரெண்டு மாட்டுக்கும் பால் கறக்க கத்துக்
குடுத்திருக்கீங்களா?''
நா.வினோத்குமார்,
பாராஞ்சி, அரக்கோணம் - 632510.
""ஒரு நாள்கூடத் தவறாம அவர் "வாக்' போவாரு''
""..."வாக்' தவறாதவர்னு சொல்லு!''
டீ.என்.பாலகிருஷ்ணன்,
சென்னை.
""எதுக்குடா மாடிப்படிக்கட்டை பார்த்துக்கிட்டே இருக்கே?''
""அடிபட்ட இடத்தை நல்லாப் பார்த்துக்கோன்னு பாட்டி சொன்னாங்க!''
நா.வினோத் குமார், பாராஞ்சி.
""உன் தங்கச்சியை ஏன் திட்டறே?''
""வாழைப்பூவைத் தலையிலே
வெச்சுவிடணும்னு அடம் பிடிக்கிறாள்!''
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
""நான் தோசை செய்தேன்!''
""நிஜமாவா?''
""தோசை மாவுலேதான் செஞ்சேன்!....
நிஜமாவுன்னு ஒரு மாவு இருக்கா என்ன?....""
ம.செ.மயில்,
திருநெல்வேலி டவுன் - 627006.