சிறுவர்மணி

தீராத சங்கடம்!

தேவராஜன் என்பவன் ஒரு வீதியின் ஓரத்தில் கன்னத்தில் கை வைத்தவாறு அழுது கொண்டிருந்தான். அவனுடைய ஐம்பது ரூபாயைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மயிலை மாதவன்

தேவராஜன் என்பவன் ஒரு வீதியின் ஓரத்தில் கன்னத்தில் கை வைத்தவாறு அழுது கொண்டிருந்தான். அவனுடைய ஐம்பது ரூபாயைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ரொம்ப அழுதுகொண்டிருந்தான். கடவுளை வேண்டிக்கொண்டான்.

கடவுள் அவனுக்கு முன் தோன்றினார்.

""என்னப்பா?... ஏன் இப்படி அழுதுகிட்டிருக்கே?...'' என்று கேட்டார்.

""என்னோட ஐம்பது ரூபாயைக் காணலே சாமி!''

""சரி போனாப் போகுது விடு!.... கவலைப் படாதே!.... நான் உனக்கு வேறே ஐம்பது ரூபாயை வரவழைச்சுக் கொடுக்கறேன்!''

என்று கூறிவிட்டு, உடனே ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்றை வரவழைத்துத் தந்தார்.

அதை வாங்கிக் கொண்ட அவன் இன்னும் பலமாக அழத்தொடங்கினான்.

""என்ன ஆச்சு? மறுபடியும் ஏம்ப்பா அழறே?'' என்று கேட்டார் கடவுள்.

""நான் தொலைச்ச ஐம்பது ரூபாய் இருந்தா இப்போ கையிலே நூறு ரூபாய் இருக்குமே'' ன்னு சொல்லிட்டு தேம்பித் தேம்பி அழுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிச.27-இல் காஞ்சியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

போளூரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

மகாராஷ்டிரம்: பாஜகவில் இணைந்தாா் காங்கிரஸ் பெண் எம்எல்சி

தோ்தல் பிரிவு அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT