முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு...

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

1. மழைக்குப் பிறந்தவன் குடைக்கு எடுத்துக்காட்டு...
2. தண்ணீரிலே வாழ்வான் தலைகுளிக்க மாட்டான்...
3. விறகுக்கு ஆகாத மரம், வீணாக நிற்காத மரம்...
4.  வசப்படும் என்று வால் கட்டிப் பறந்தாலும், எதுவும் புலப்படாமல் போய்க்கொண்டே இருக்கும்...
5. நிமிர்த்தினாலும் வளைந்து விடும், துரத்தினாலும் தொடர்ந்து வரும்...
6.  பெட்டிக்குள் இருந்தாலும் கெட்டுப் போகாத இடம்...
7. பெரிய உருவம் கொண்ட அண்ணாச்சிக்குச் சிறிய கண்கள்...
8. அடுக்கடுக்காய் சீப்பு இருக்கும், ஆனால் தலை வார முடியாது...
9. கையில் எடுத்தால்தான் வாயைத் திறக்கும், தைப்பவருக்கு 
உதவியாக இருக்கும்...


விடைகள்

1. நாய்க்குடை  
2. தாமரை இலை
3. மின்கம்பம்  
4. வானம்  
5.  நாய்   
6.  குளிர்சாதனப் பெட்டி  
7.  யானை   
8.  வாழைச்சீப்பு  
9.  கத்திரிக்கோல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.