முகப்பு
சிறுவர்மணி

சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இறைவனைக் குறிக்கும் இன்னொரு சொல் கிடைக்கும். 

எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...

1. பள்ளியிலும் இருப்பார், பத்திரிகை அலுவலகத்திலும் இவர் இருப்பார்...
2. சிவபெருமானின் நடனத்தை இப்படிச் சொல்வார்கள்...
3. நுழைவுச் சீட்டு வேண்டுமென்றால் இதைச் செலுத்த வேண்டும்...
4. நறுமணம் தரும் குச்சி....
5. இந்த நீர் உப்புக் கரிக்கும்....

விடை: 

கட்டங்களில் வரும் சொற்கள்


1.ஆசிரியர்,  
2. தாண்டவம்,  
3. கட்டணம்,  
4. ஊதுவத்தி,  
5. கடல்நீர்.


வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : ஆண்டவர்

முழு கட்டுரையைப் படிக்க →