சிறுவர்மணி

ஆனந்தக் குளியல்!

ரமணி

மாலை வேளை. குளிர ஆரம்பித்திருந்தது. தெய்வக்குழந்தை கண்ணன் தெருவில் புழுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். உடலெல்லாம் புழுதி. அதை ஒரு கோபிகாஸ்த்ரீ பார்த்து விட்டாள். அவள் குழந்தையைக் குளிப்பாட்ட நினைத்தாள்.  அருகில் ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து குழந்தையைக் குளிப்பாட்ட குளிர்ந்த நீரை எடுத்து வந்தாள். தண்ணீர் சில்லென்று இருந்தது.

சற்று வெதுவெதுப்பாக இருக்கும் என நினைத்து ஒரு சிறு தவலையில் தண்ணீரை நிரப்பி அடுப்பில் சூடு பண்ணிக்கொண்டிருந்தாள். வெகுநேரம் ஆகியது. தண்ணீர் சுட்டபாடில்லை! ஆனால் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது! அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

""தண்ணீரைக் கீழே கொட்டிடுங்க!'' என்றது தெய்வக் குழந்தை!

அந்த மாயச் சொற்களைக் கேட்டு புன்னகையுடன் தண்ணீரைக் கீழே கொட்டினாள் கோபிகை. கொட்டிய நீரிலிருந்து ஒரு தவளை குதித்துக்கொண்டு ஓடியது. 

நல்ல காலம் தண்ணீரி சூடாகவில்லை!.... இந்தச் சிறிய உயிர் காப்பாற்றப்பட்டது!.... தண்ணீர் சூடாகாமல் போனதற்கு தெய்வக்குழந்தையின் கருணையே காரணம் என உணர்ந்தாள் அந்த கோபிகை!

பிறகு வெந்நீர் வைத்து குளிப்பாட்டி அலங்கரித்து  கண்ணனை மேலும் அழகாக்கினாள் அவள்!

(காது வழிக் கதை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT