சிறுவர்மணி

கடி

DIN

அப்பா... டீச்சர் கேட்ட கேள்விக்கு நான் "டக்'க்குன்னு பதில் சொல்லி "குட்' 
வாங்கிட்டேன்.
அப்படியா? என்ன கேட்டாங்க...?
"நீரிலும் நிலத்திலும் வாழும் பறவை எது'ன்னு கேட்டாங்க... "டக்'க்குன்னு 
சொன்னேன்.

கே.ஆர்.ஜெயக்கண்ணன்,
குமரி மாவட்டம் - 629 703.


தம்பி... நல்லா படிச்சு உங்க அப்பாவுக்கு நல்ல பேரு வாங்கித் தரணும்!
ஏன்... சுப்பிரமணிங்கிற பேரு எங்கப்பாவுக்கு நல்லாயில்லையா?

நெ.இராமன்,
சென்னை.

என்னோட பையன் எள்ளுன்னா 
எண்ணெய்யா வந்து நிற்பான்...
அடப்பாவமே இந்தச் சின்ன வயசுலயே அவனுக்குக் காது கேட்காதா...?

நா. வினோத் குமார்,
பாராஞ்சி.

எங்க ஹெட்மாஸ்டர் "ஹேர்டை' அடிச்சிகிட்டுத்தான் பள்ளிக்கு வருவாரு!
அப்ப  தலை"மை' ஆசிரியர்னு சொல்லு...

துடுப்பதி வெங்கண்ணா,
பெருந்துறை.

நம்ம அம்மா அப்பாவுக்கு இல்லாத 
அக்கறை பஸ் கண்டக்டருக்கு இருக்குன்னு எப்படி சொல்ற நீ...?
அவர்தான் நாம பஸ்ல ஏறினோன்னயே "பாஸா'ன்னு கேட்கிறார்.

எஸ்.எம். சுல்தான்,
மதுரை.

இரண்டாவது உலகப் போர் ஏன் நடந்தது?
முதல் உலகப் போர் சரியா நடந்திருக்காது சார்...!

டி.மோகன்தாஸ், 
நாகர்கோவில் - 629 001
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT