சிறுவர்மணி

விடுகதைகள்

பரந்து விரிந்தவன், பல வண்ணம் காட்டுகிறான்.

DIN


1.  பரந்து விரிந்தவன், பல வண்ணம் காட்டுகிறான்.
2. நீரில் வேட்டையாடும் எங்க ஊர் வெள்ளைச்சாமி, வலை இல்லாமலேயே மீன் பிடிப்பான்.
3. எல்லாவற்றையும் பார்க்கும் இவர்களால், ஒருவரையொருவர் பார்க்க முடியாது.
4. குதிரில் கொட்டி வைக்காத தானியம், கொடை வள்ளல் கொடுக்காத தானியம்.
5.  அங்கும் இங்கும் துள்ளுவான், அலுக்காமல் துவளாமல் துள்ளுவான்.
6. வானிலிருந்தும் வருவான், பூமிக்கடியிலிருந்தும் வருவான்.
7. உப்பை உண்டதால், ஓயாமல் இரைகிறான்.
8. இஷ்டம்போலக் காடு மேடுகளில் பாடுவான், கச்சேரியில் மட்டும் பாட மாட்டான்.


விடைகள்

1.  வானம்   
2. கொக்கு
3. கண்கள்
4. ஆற்று மணல்
5.  தவளை
6.  மழை நீர், கிணற்று நீர்
7.  கடல், கடல் அலை
8.  வண்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

2 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழில் இருக்கும் ஒற்றுமை தெலுங்கில் இல்லை: தமன்

விநாயகன் - மம்மூட்டி மோதல்: ரூ.75 கோடியை தாண்டிய களம்காவல்!

SCROLL FOR NEXT