வாழ்க்கையின் நோக்கம் என்ன?... அதன் பயன் என்ன?... என்பதை அறிவதே உயர்தரக் கல்வியின் குறிக்கோளாய் இருத்தல் வேண்டும்.
மனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எதையும் சாதிக்க இயலும். மலைகளையும் அணுவாக ஆக்க முடியும்.
நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமையின் உண்மையாகும்.
தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் நம்பிக்கையும் நிச்சயமாக வராது.
பேசுவதைக் குறைத்துக்கொண்டு செயலில் இறங்குதல் மிக முக்கியம்.
மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.
உலகிற்கு சேவை செய்வதே நமது நோக்கம். நமது பெயர்களைப் பறைசாற்றுவதற்காக அல்ல.
நம் அனைவரிலும் கடவுள் இருக்கிறார். எனவே நம் மீதே நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.
உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும்.
உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதன் பொருட்டும் உண்மையைத் துறக்கலாகாது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.