சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் நல்லதொரு பல்கலைக்கழகத்தைக் குறிக்கும் சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. செக்கிலிருந்து கிடைப்பது... எண்ணெய் அல்ல...
2. இவர் இருந்தால்தான் வாகனம் ஓடும்...
3. இல்லறமே.........
4. உயர்ந்து நிற்கும், நுங்கு தரும்...
5. வெள்ளையடிக்கவும் வெற்றிலைக்கும் இது தேவை...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. புண்ணாக்கு,
2. ஓட்டுநர்,
3. நல்லறம்,
4. பனைமரம்,
5. சுண்ணாம்பு.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : குடும்பம்