நாணுடைமை
நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆள் பவர்.
பொருட்பால் - அதிகாரம் 102 - பாடல் 7
நாணால் உயிரைத் துறப்பவர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்.
- திருக்குறள்
Advertisement
நாணம் என்று சொல்வது
இழிந்த செயலுக்கு அஞ்சுவது
இழிசொல் நேர்ந்தால் உயிரையும்
துறந்திட அவர்கள் துணிவார்கள்
உயிரோடு வாழ ஆசைப்பட்டு
நாணத்தைத் துறக்க மாட்டார்கள்
நாணத்தைக் கைவிடாமல் காப்பார்கள்
நல்லவராகவே வாழ்வார்கள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்