முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

காவி உடை அணியாத தவசி, கரையோரம் கடுந்தவம் செய்கிறார்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
பகிர்:

1. காவி உடை அணியாத தவசி, கரையோரம் கடுந்தவம் செய்கிறார்...
2. காளைக்குக் கழுத்து வரை மட்டும் தண்ணீர்...
3. காலைக் கடிக்கும் செருப்பு அல்ல, காவல் காக்கும் நாய் அல்ல...
4.  காலில்லாத பந்தலைக் காணக் காண சந்தோஷம்...
5. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக்காரி..
6. தண்ணீரில் மிதக்குது அழகிய வீடுகள்...
7. மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல்...
8. தொட்டுவிட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை
 ஜன்னல்கள்...
9. சிவப்பு மஞ்சள் பெட்டிக்குள் கருகமணி முத்துக்கள்...


விடைகள்


1. கொக்கு  
2.  தவளை  
3. முள்
4. வானம்  
5.  மயில்  
6.  கப்பல்கள்
7.  ஒட்டகம்  
8.  தொட்டாச் சுருங்கிச் செடி
9.  பப்பாளி விதைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.