விடுகதைகள்
கேணியைச் சுற்றிப் புதர்...
1. கேணியைச் சுற்றிப் புதர்...
2. பெண்ணோ ஒருத்தி, புடவையோ ஆயிரம்...
3. தொட்டாலும் குத்தும் பட்டாலும் குத்தும்...
4. ஐந்து நதிகளுக்கும் ஒரே பாலம்...
5. தரையைத் தடவும் மரம், தச்சர் வெட்டாத மரம்...
6. பற்றி எரிந்தாலும் பக்தியை உருவாக்குவாள்...
7. ஆயிரம் பேர் அணிவகுப்பு ஆனாலும் இல்லை சலசலப்பு...
8. தண்ணீரில் துள்ளி மகிழ்வான், தரையில் துவண்டு போவான்...
விடைகள்
1. கண் புருவம்,
2. வெங்காயம்,
3. நெருஞ்சி முள்,
4. உள்ளங்கை,
5. துடைப்பம்,
6. கற்பூரம்,
7. எறும்புக்கூட்டம்,
8. மீன்.