சிறுவர்மணி

நினைவுச் சுடர்!:  அன்னையின் பெருமிதம்!

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை அவருடைய தாய், "ரானடே! இங்கே வா' என்று கூப்பிட்டார். "எதற்கம்மா அழைத்தீர்கள்?' என்று கேட்டபடி தாயின் அருகில்  ஓடிவந்தான் ரானடே.

DIN

தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மகனை அவருடைய தாய், "ரானடே! இங்கே வா' என்று கூப்பிட்டார். "எதற்கம்மா அழைத்தீர்கள்?' என்று கேட்டபடி தாயின் அருகில்  ஓடிவந்தான் ரானடே.

"ரானடே! இந்தா உனக்கு இரண்டு லட்டுகள். ஒன்றை நீ எடுத்துக்கொண்டு இன்னொன்றை உன் நண்பனுக்குக் கொடுத்து விடு' என்றார்.

அம்மா கொடுத்த லட்டில் ஒன்று பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருந்தது. பெரிய லட்டை நண்பனுக்குக் கொடுத்துவிட்டு சிறிய லட்டை தான் எடுத்துக் கொண்டான் ரானடே.

அவன் பெரிய லட்டை தன் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியின் மகனுக்குத்தான் கொடுத்தான். இத்தனை சிறிய வயதில் மகனின் பரந்த மனதை நினைத்துப் பெருமிதம் கொண்டார் அவனுடைய தாயார்.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் நீதிபதியாகவும்,  சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த மகாதேவ கோவிந்த ரானடே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

SCROLL FOR NEXT