சிறுவர்மணி

தீப ஒளித் திருநாள்!

நிலம் தொட்டு வான் முட்டும் பொறிவாணங்கள்நிமிர்ந்தொளிரும் நீதியென்று நலம் பேணுங்கள்!

புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்


நிலம் தொட்டு வான் முட்டும் பொறிவாணங்கள்
நிமிர்ந்தொளிரும் நீதியென்று நலம் பேணுங்கள்!
பலவண்ணத் தாரகைகள் போலச் சிதறும் 
பார்ப்போரை சிரிக்க வைக்கும் தீபாவளி!

இருள்நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவரவே 
இல்லங்களில் தீப ஒளியேற்றுங்கள்
வழிவழியாய் வந்ததிந்தக் கொண்டாட்டங்கள்
வறுமையையும், துன்பத்தையும் வெளியேற்றுங்கள்!

ஆறிலிருந்து அறுபது வயதுடையோர்கள் 
அகமகிழ்ந்து கொண்டாடி மனங்குளிர்வார்கள்!
நாரெடுத்து மலர் தொடுத்து நாட்டோர் எல்லாம் 
நன்மைகளைச் சேர்த்தெடுத்து இன்பம் கொள்வார்

தீ விபத்தைத் தவிர்த்து நாமும் பாதுகாப்பாய் 
வெடி வாணச் சக்கரங்கள், மத்தாப்பெல்லாம் 
வேடிக்கை யாய் விட்டு  மகிழ்ந்திடுவோமே!
வெடி வைத்தால் வெகுதூரம் விலகிடுவோமே!

தீமை இருள் விலக்கிவிடும்   தீப ஒளி!
தித்திக்கும் நினைவுகளைக் கொண்டு சேர்க்கும்!
தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுவோம்!
தீஞ்சுவைப் பல காரங்கள் பரிமாறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

விழுப்புரம் கே.கே.சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விழுப்புரம் நகரம், புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை

புதுவையில் மின் பயன்பாடு அதிகரிப்பு: முதல்வா் ரங்கசாமி

SCROLL FOR NEXT