இல்வாழ்க்கை
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.
அறத்துப்பால் - அதிகாரம் 5 - பாடல் 8
ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
- திருக்குறள்
அடுத்தவர்க்கும் வழிகாட்டி
தானும் நல்ல வழி நடந்து
அறநெறிகள் தவறாமல்
வாழும் வாழ்வு நல்வாழ்வு
Advertisement
அடுத்தவர்கள் ஒழுக்கமாய்
வாழ்வதற்கு புத்தி சொல்லி
உதவியாக வாழ்வதுதான்
தவத்தை விட நல்வாழ்வு
-ஆசி.கண்ணம்பிரத்தினம்