கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் விலையைக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். பக்கத்தைப் புரட்டாமலேயே கண்டுபிடித்து விடலாம்...
1. விதவிதமான மலர்கள் சேர்ந்த மாலை...
2. பிளாஸ்டிக் பைகள் வருவதற்கு முன்னர் காகிதத்தில் இது செய்து, கடைகளில் பொருள்களைத் தருவார்கள்.
3. சற்றே சிறிய துன்பத்தை தயக்கத்தை இப்படிச் சொல்வார்கள்...
4. இந்தக் கிணறால் பயன் ஒன்றும் கிடையாது...
5.இருபத்து நான்கு மணி நேரமும் ஓடிக் கொண்டிருப்பவன்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. கதம்பம்,
2. பொட்டலம்,
3. சங்கடம்,
4. பாழ்கிணறு,
5. கடிகாரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : கட்டணம்