சிறுவர்மணி

அறிவாலயம்

மலர் மகன்

நூலகம் செல்வது நற்பழக்கம் - அது
நாளும் வரணும் நம்பழக்கம்!
நூலகம் என்பது போதிமரம் - அதன்
நிழலில் ஒதுங்கு; ஞானம்வரும்!

நூலகம் அது  ஒரு "நூல்'ஏணி - உன்
நோக்கம் உயர்த்தும் புகழ் ஏணி!
படங்கள் போட்ட கதைநூல்கள் - நல்ல
பாட்டும் சொல்லும் கவிநூல்கள்!

திடமாய் வளரும் பொதுஅறிவு- அங்கு
தினமும் நூல்கள் புதுவரவு!
அறவுரை கூறும் சிறுநூல்கள் - நுட்ப
அறிவியல் பேசும் சிலநூல்கள்!

வரலா றுகளும் வாழ்வியலும் - உன்னை
வடிவமைக் கின்ற தாய்மடிகள்!
தன்னம் பிக்கை தரும்நூல்கள் - உன்
தகுதியை வளர்க்கும்  பெருநூல்கள்

இன்னும் எத்தனை உண்டிங்கு - நீ
ஏற்றம் பெறுவாய் சென்றங்கு!
நூலகம் செல்வது நற்பழக்கம் - அது
                       நாளும் வரணும் நம்பழக்கம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT