சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

DIN


பட்டாம்பூச்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றன. இதில் எந்த வகை சிறந்தது, இவற்றின் ஆயுட்காலம் எவ்வளவு? 

பட்டாம்பூச்சிகளைப் பார்த்தாலே மனம் துள்ளும். உலகில் விதவிதமான பட்டாம்பூச்சிகள் உள்ளன. அத்தனையும் அழகோ அழகு... கொள்ளை அழகு. இவற்றில்தான் எத்தனை வண்ணங்கள்!

இவற்றில் மிகவும் அழகானவை "மோனார்க்' என்று அழைக்கப்படும் பட்டாம்பூச்சிதான். இது அளவிலும் மிகப் பெரியது. இது சிறகை விரித்தால் 3.7 அங்குலத்திலிருந்து 4.1 அங்குலம் நீளம் வரை இருக்கும். இந்த வகை பட்டாம்பூச்சிகள் வட அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும்.

நாம் பார்க்கும் சாதாரண பட்டாம்பூச்சிகளின் ஆயுட்காலம் 6-இல் இருந்து 14 நாள்கள் வரைதான். மோனார்க் பட்டாம்பூச்சி 6-இல் இருந்து 9 மாதங்கள் வரை வாழும். உலகிலேயே மிக நீண்ட ஆயுள்காலத்தைக் கொண்ட பட்டாம்பூச்சி வட அமெரிக்காவில் வாழ்கிறது. இது "மோர்னிங் க்ளோக்' என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 11 மாதங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT