சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

மேகம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் வெண்மையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படியானால் மழை வருவதற்கு முந்தைய மேகம் மட்டும் ஏன் கருமை நிறத்தில் இருக்கின்றது?

ரொசிட்டா

மேகம் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் வெண்மையாக இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படியானால் மழை வருவதற்கு முந்தைய மேகம் மட்டும் ஏன் கருமை நிறத்தில் இருக்கின்றது?

மேகத்தில் உள்ள குட்டிகுட்டியான நீர்த்திவலைகள் சூரியனின் வெளிச்சக் கதிர்களைப் பிரதிபலிப்பதால் மேகம் வெண்மையாக இருக்கின்றது என்று சென்ற வாரம் படித்தோம். அப்படியானால் மழை மேகம் மட்டும் ஏன் கருப்பாக இருக்க வேண்டும்? முதலில் மழை மேகம் எப்படி உருவாகிறது என்று கவனியுங்கள். 

பூமியிலுள்ள நீர்த்துளிகள் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகின்றன. இந்த நீர்த்துளிகள்தான் வெண்ணிற சூரியக் கதிர்களை பிரதிபலித்து மேகத்துக்கு வெண்மை நிறம் தருகின்றன. இதே நீர்த்துளி ஆவி அதிகமாகச் சேர்ந்துகொண்டே போவதால் மேகத்தில் அடுக்கடுக்காக நீர்த்திவலைகள் சேர்ந்துகொண்டே போகின்றன. இப்படி சேரச் சேர அந்த மேகம் மிக உயரத்துக்குச் சென்றுவிடுகிறது. இந்த இரண்டு காரணங்களினால் மேக நீர்த்திவலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலித்தாலும் அந்த அடுக்குகளைத் தாண்டி அந்த ஒளி நம்மை அடைவது கடினமாகிவிடுகிறது.

மேலும், இந்தக் கார்மேகங்கள் மிக உயரத்திற்கும் சென்று விடுவதால் நமக்கு இந்த மழை மேகம் கருமையாகத்தான் தோன்றும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்: எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 8.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT