1. காலில் தண்ணீர் குடிப்பான்... தலையில் முட்டையிடுவான். இவன் யார்?
2. சலசலவென்று சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான்...
3. கல்லில் காய்க்கும் பூ தண்ணீரில் மலரும் பூ...
4. காற்றைக் குடித்துக் காற்றில் பறப்பான்...
5. காற்று நுழைந்தால் கானம் பாடுவான்...
6. அனைவரையும் நடுங்க வைப்பான்,
ஆதவனுக்கே அடங்குவான்...
7. அடி மலர்ந்து நுனி மலராத பூ. என்ன பூ?
8. பேசாத வரை நான் இருப்பேன்... பேசினால் நான் உடைந்து விடுவேன். நான் யார்?
9. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. இது என்ன?
விடைகள்
1. தென்னை மரம்
2. அருவி
3. சுண்ணாம்பு
4. பலூன்
5. புல்லாங்குழல்
6. குளிர்
7. வாழைப்பூ
8. அமைதி
9. தண்ணீர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.