ஓரெழுத்து விடுகதை
வரவேற்கும் ஓரெழுத்து
1. வரவேற்கும் ஓரெழுத்து
2. பறக்கும் ஓரெழுத்து
3. சோலையாகும் ஓரெழுத்து
4. பசுவாகும் ஓரெழுத்து
5. மணமுள்ள ஓரெழுத்து
6. பாட்டாகும் ஓரெழுத்து
7. குயிலின் குரலாகும் ஓரெழுத்து
8. தூய்மை குறிக்கும் ஓரெழுத்து
9. முக்கனியில் ஒன்றாகும் ஓரெழுத்து
10. சுவைக்கும், பேசும் ஓரெழுத்து
11. முன்னிலை குறிக்கும் ஓரெழுத்து
12. தரச் சொல்லும் ஓரெழுத்து
13. வினைபல புரியும் ஓரெழுத்து
14. எதனையும் சாம்பலாக்கும் ஓரெழுத்து
15. கண்ணுக்கு அழகு தரும் ஓரெழுத்து
16. வாங்கியதைப் போட்டுக்கொள்ள உதவும் ஓரெழுத்து
17. தமிழ் மாதம் குறிக்கும் ஓரெழுத்து
18. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து
19. சிவப்பு நிறத்தைக் குறிக்கும் ஓரெழுத்து
20. பெரிய எனும் பொருள் தரும் ஓரெழுத்து
விடைகள்:
1. வா, 2. ஈ, 3. கா, 4. ஆ, 5.பூ, 6. பா, 7. கூ, 8. தூ, 9. மா, 10. நா, 11. நீ, 12. தா, 13. கை, 14. தீ, 15. மை, 16. பை, 17. தை, 18. கோ, 19. சே, 20. மா. (எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் எழுதிய "விடுமுறையில் விளையாட விநோத விடுகதைகள்' நூலிலிருந்து...)