1.ஆள் இல்லாத கிணற்றிலே மரம் இறங்கிக் கூத்தாடுது. அது என்ன?
2. ஆடி ஆடி நடக்கும். அரங்கதிர நடக்கும். அது என்ன?
3. தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவிப் பாயுது கப்பல். அது என்ன?
4. தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம். அவன் யார்?
5. எதிரியைக் கண்டால் முடியெல்லாம் முள்ளாகும். அவன் யார்?
6. அச்சு இல்லாத சக்கரம். இறகு இல்லாத சக்கரம். அது என்ன?
7. இதயம் போல் துடிப்பிருக்கும். இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
8. நடப்பான், கடிப்பான், ஓடுவான், பேச மாட்டான். அவன் யார்?
விடைகள்
1. மத்து,
2. யானை,
3. ஓட்டகம்,
4. சிங்கம்,
5. முள்ளம்பன்றி,
6.வளையல்,
7. கடிகாரம்,
8. செருப்பு.
- முத்துக்குமரன் தொகுத்த "விந்தையான விடுகதைகள்' என்ற நூலிலிருந்து..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.