வகுப்பறை அலப்பறைகள்....
ஒரு மணி நேரம் கரடியாக கத்தி பாடம் நடத்துறேன். உன் மண்டையில ஏறித் தொலைய மாட்டேங்குதே?
""ஒரு மணி நேரம் கரடியாக கத்தி பாடம் நடத்துறேன். உன் மண்டையில ஏறித் தொலைய மாட்டேங்குதே?''
""சாரி சார். எனக்கு கரடி பாஷை தெரியாது''
-மல்லிகை மன்னன்,
மதுரை.
"" விளையாட்டு போட்டியில கலந்துக்கிட்டியே .பரிசு கிடைச்சதா?''
""மொபைல் போன் "கேம்ஸ்' ல பூங்கொத்து தான் சார் கிடைச்சது.''
-ம.வசந்தி,
திண்டிவனம் .
""டேய். மிருக காட்சி சாலையில் இருந்து ரெண்டு மனித குரங்கு தப்பிச்சு போயிடுச்சாம்!''
""இன்னொன்னு எங்கடா இருக்கு..!''
- தீபிகா சாரதி,
சென்னை.