முந்திச் சென்ற தந்தி..!
இணையம் என்றொரு விந்தையில் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. இப்போது தகவல்களை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு சில விநாடிகளில் தெரிவிக்க முடியும்.
இணையம் என்றொரு விந்தையில் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. இப்போது தகவல்களை வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு சில விநாடிகளில் தெரிவிக்க முடியும். ஆனால், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கஷ்டம்தான்! தரைவழித் தொலைபேசிகளே சரியாக எட்டிவிடாதபகுதிகளில், தந்திகள்தான் தகவல் பரிமாற்றம். இதை சிறுவர்கள் தங்கள் வீட்டு பெரியோரிடம் கேட்டறியலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் என்றொரு ஊர். சின்ன சேலத்துக்கும் சேலத்துக்கும் இடையே 14 கி.மீ. தூரம். ஒரு நாளில் சில பேருந்துகளே இந்த ஊர்களுக்கு இடையே செல்லும்.
அப்போதெல்லாம் சின்ன சேலத்தில் இருந்து தந்தி பதிவு செய்தால், அந்தத் தந்தியில் உள்ள தகவல் சின்ன சேலத்திலிருந்து விழுப்புரம் தந்தி நிலையத்துக்கும், அங்கிருந்து சென்னை மத்திய தந்தி நிலையத்துக்கும், அங்கிருந்து சேலத்துக்கும் செல்லும். பெருமளவில் துயர, அவசர செய்திகளுக்குத்தான் தந்தியைப் பயன்படுத்துவார்கள். இவ்வாறாக, முக்கிய உறவினர் ஒருவருக்குத் தந்தி அனுப்பியவர், ஒரு ஆளையும் பேருந்தில் அனுப்பி தகவல் சொல்ல அனுப்பிவைத்தார். அந்த நபர் சேலம் சென்று தகவல் தெரிவிப்பதற்குள், உறவினர் புறப்பட்டு சின்ன சேலம் வந்தடைந்து விட்டார் என்றால் தந்தியின் வேகத்தை இன்றைய இளையதலைமுறையினர் அறிய வேண்டுமே!
இன்று உலகில் எந்த மூளையில் இருப்போருக்கும் ஒரு விநாடியில் தகவல் தெரிவித்துவிட முடிந்தஇந்தக் காலத்தில், தந்தியின் மகிமைகள் சொல்லி மாளாது.