ராணுவ ஜெனரலாக பெங்குவின்
நார்வேஜியன் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக ஓர் பெங்குவின் பணிபுரிந்துவருகிறது.
நார்வேஜியன் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக ஓர் பெங்குவின் பணிபுரிந்துவருகிறது. இந்தப் பதவி ராணுவத்தின் மிக உயர்ந்த மூன்றாவது பதவியாகும். சர் பட்டம் பெற்ற இந்த பெங்குவினின் பெயர் "சர் நீல்ஸ் ஒலாவ் 3''. அண்மையில் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு கிடைத்தபோது, 160 படைவீரர்கள் மரியாதை செலுத்திய நிகழ்வும் நடைபெற்றது.
சம்பத்குமாரி,
பொன்மலை.