மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?
ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே- நீ
ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே!
நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே- நம்
நல்லவர்கள் தூங்கும்படி வளர்ந்து விடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக் கூடாது- பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது!
மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது- தன்
மாமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது!
துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேண்டும்
வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேண்டும்- அறிவு
வளர்ச்சியாகவே வான்முகட்டைத் தொடவேணும்
வெற்றி மேல் வெற்றி வர விருதுவர பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேண்டும்
-தகவல்- தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.