உதிச்ச என்று எழுதாதே! தம்பி
உதித்த என்றே எழுதிடு!
உடம்படிக்கை என்று எழுதாதே!- தம்பி
உடன்படிக்கை என்றே எழுதிடு!
உன்னோட என்று எழுதாதே!- தம்பி
உன்னுடைய என்றே எழுதிடு!
உந்தன் என்று எழுதாதே!- தம்பி
உன்றன் என்றே எழுதிடு!
உம்மனாம்மூஞ்சி என்று எழுதாதே!- தம்பி
உம்மென்னும்முகம் என்றே எழுதிடு!
ஊர்சுத்தி என்று எழுதாதே!- தம்பி
ஊர்சுற்றி என்றே எழுதிடு!
ஊத்தி என்று எழுதாதே!- தம்பி
ஊற்றி என்றே எழுதிடு!
தவறாய்த் தமிழை எழுதாதே!- தம்பி
சரியாய் எழுதப் பழகிடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.