வெட்கப்படக் கூடிய ஒரே உயிரினம் எது தெரியுமா? மனித இனம்தான். மற்ற உயிரினங்களுக்கு வெட்கப்பட தெரியாது; முடியாது. இதற்கு காரணம் நமது முகத்திலுள்ள சில ரத்த நாளங்களின் செயல்பாட்டால்தான் "வெட்கம்' தெரிகிறது. இப்படி மனிதர்கள் வெட்கப்படுவது அவர்கள் மீது அதிக நம்பிக்கைத்தன்மையை ஏற்படுத்துவதுதான் சில ஆய்வுகள் கூறுகின்றன.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட "லகான்' படம் ஹிந்தியில் மிகப் பெரிய வெற்றிப் படமாகும். இதன் ஹைலைட்டே கிளைமாக்ஸ்தான். 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில், படமாக்கப்பட்டது.
ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் ஆண், பெண் என இரு பாலருமே லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினர். இரும்புத் துகள், பாதரசம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட லிப்ஸ்டிக், அந்தஸ்தை காட்டுவதாக இது அமைந்தது.
வாக்கிங் செல்லது நல்ல பயிற்சிதான். ஆனால், பின்னோக்கி நடப்பது உடலுக்கு நல்லது என்கிறது ஆய்வு. இப்படி நடப்பதால், பலவித தசைகள் புத்துணர்வு பெறுகிறது என்றும் முதுகு வலி, குறைதல், தசை வளர்ச்சி, தசைப் பிடிப்பு தடுப்பு, சுவாசம் அதிகரிப்பு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கின்றன என்றும் கூறப்படுகிறது. பின்னோக்கி நடப்போர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.