சிறுவர்மணி

கதை சொன்னவரின் கதை...

முயல், ஆமையின் கதை தெரியும். முயல் அலட்சியத்தால் தூங்கும்போது, ஆமை விடாமுயற்சியால் வெற்றி பெற்ற கதையை முதலில் சொன்னவர் ஈசாப்.  இவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை.

DIN

முயல், ஆமையின் கதை தெரியும். முயல் அலட்சியத்தால் தூங்கும்போது, ஆமை விடாமுயற்சியால் வெற்றி பெற்ற கதையை முதலில் சொன்னவர் ஈசாப். இவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்வோம்.

அவர் பழங்காலத்தில் ஒரு கிரேக்க அரசரின் அடிமையாக இருந்தார். பார்ப்பதற்கு அழகில்லாமல் இருந்த ஈசாப்பில் தட்டிக் கதைகள் மக்களைக் கவர்ந்தன.

ஒரு சமயம் ஈசாப்பிடம் கிரேக்க மன்னர் சிறிது பணம் கொடுத்து, டெல்பி என்ற நகருக்கு அனுப்பினார். அந்த நகர மக்கள் பேராசைக்காரர்களாக இருந்தனர். ஈசாப்பிடம் உணவுக்காக நிறைய பணம் கேட்டனர்.

பணம் கேட்ட மக்களுக்காக ஈசாப், பொன் முட்டை இடும் வாத்தின் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு டெல்பி மக்கள் மனம் நொந்தனர்.

ஈசாப்பின் கதைகள் அறுநூறுக்கும் மேற்பட்டவை புழக்கத்தில் உள்ளன. வில்லியம் காக்ஸ்டன் என்பவர், 1484-ஆம் ஆண்டில் ஈசாப்பின் கதைகளைத் தொகுத்து வெளியிட்டார்.

ஈசாப் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் இருக்கிறது. ஈசாப்புக்கு ரோம் நகரில் ஒரு சிலை கூட இருக்கிறது.

ஈசாப்பின் "வெட்டுக்கிளியும் எறும்பும்', "திராட்சை புளிக்கும்' என்று சொன்ன நரியின் கதை வெகு பிரசித்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: நாமக்கல் மாவட்டத்தில் 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்: நயினாா் நாகேந்திரன்

அனுமதியின்றி பட்டாசுக் கடைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும்: தீயணைப்பு அலுவலா் ஆா்.அப்பாஸ்

SCROLL FOR NEXT