சிறுவர்மணி

சிட்டுக் குருவி...

சிறகடிக்கும் சிறுவன்: வானில் விளையாடும் சிட்டுக்குருவியின் அழகிய வாழ்க்கை!

அ.கருப்பையா

சிட்டு சிட்டுக்குருவியே

சின்னஞ்சிறிய குருவியே

வட்ட மிட்டு வானிலே

வந்து தரையில் அமர்கிறாய்!

கொட்டிக் கிடக்கும் உணவினைக்

கொத்தித் தின்னும் அழகினை

எட்டி எட்டிப் பார்ப்பதால்

எங்கள் உள்ளம் துள்ளுதாம்!

பட்டுப் போன்ற உடலையும்

பார்க்கும் கண்கள் அலகையும்

தொட்டுப் பார்க்க ஆசைதான்

தோழன் போன்று அருகில்வா!

சுற்றுச்சூழல் கேட்டினால், உன்

சுற்றம் குறைந்து வருவதாய்

மற்றோர் சொல்வார். எங்களை

மதித்து வந்தால் காக்கிறோம்.

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT