முக்கனியில் நடுக்கனி பலாக்கனி
முள்தோலுள் தேன் சுளைகள் உளக்கனி
சுளைகளைச் சுவைத்திட இன்பம்
சுவனமே நாவினிலே தங்கும்!
-
முள்சூழ கரடுமுரடாய் முகம்காட்டும்
முள்பிளக்க அகமெல்லாம் இனித்திருக்கும்
எக்கச்சக்க சத்துகள் நிறைந்திருக்கும்
எளிதாக இதயத்தின் நலன்காக்கும்!
பலாக்கொட்டை சுட்டும் உண்ணலாம்
பலாக்கொட்டைகுழம்பும் சுவைக்கலாம்
பல சுவைகள் ஒரே கனியில் உள்ளதனால்
"பலா' என்றே பெரும்கனி பெற்றதே!
-
சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும்
சிறப்பான வாழ்க்கைக்கு விருந்தாகும்
இரத்த ஓட்டம் சீராக்கி வைத்திடும்
இன்முக வாழ்க்கையைத் தந்திடும்!
, தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.