கமலா ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைய உள்ளன. கமலா ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டு வர ஏராளமான நன்மை கிடைக்கும்.
சரும ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, செரிமானத்தை மேம்படுத்தி, இதய நோய் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருப்பவர்கள் கமலா ஆரஞ்சு ஜூஸ் குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும். அதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து குடல் இயக்கத்தைச் சீராக்கி, மலம் எளிதில் வெளியேற உதவும்.
சிலருக்கு இளம் வயதிலேயே முகச் சுருக்கம் ஏற்படுகிறது. அதைச் சீராக்க சுத்தமான பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி கமலா ஆரஞ்சு சாற்றைக் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் முகம் நாளடைவில் வசீகரமாகும் .
உஷ்ணத்தால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், அரைடம்ளர் கமலா ஆரஞ்சு சாறைப் பருகினால் வயிற்றுப் போக்குக் குணமாகும்.
-ஆர் ஜெயலட்சுமி , திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.