ஞாயிறு கொண்டாட்டம்

கலைஞர் கதை வசனத்தில் தீபிகா படுகோனே?

"ஓம் சாந்தி ஓம்' என்ற ஒரே ஹிந்திப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் கவர்ந்த தீபிகா படுகோனேவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மு

மனோஜ் கிருஷ்ணா

"ஓம் சாந்தி ஓம்' என்ற ஒரே ஹிந்திப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் கவர்ந்த தீபிகா படுகோனேவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க சில முன்னணி தமிழ்ப்படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் முயற்சி செய்துள்ளனர்.

தமிழில் நடிக்கச் சம்மதம்; ஆனால் என் சம்பளம் என மூன்று விரல்களைக் காட்டியுள்ளார் (ஒரு விரலுக்கு ஒரு கோடி). அதைக் கேட்டு அதிர்ந்தவர்கள், அமைதியாகத் திரும்பியிருக்கிறார்கள்.

நான்கு ஹிந்திப் படங்களில் நடித்துள்ள தீபிகா, தற்போதைய நிலவரப்படி பாலிவுட்டின் முன்னணி மூன்று நாயகிகளுள் ஒருவராகியிருக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் கதை, வசனத்தில் தியாகராஜன் இயக்க, அவர் மகன் பிரஷாந்த் நடிக்கும் "பொன்னர் சங்கர்' படத்தில் தீபிகாவை நடிக்க வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. கலைஞர் வசனத்துக்கு வாயசைப்பு மட்டுமே தீபிகாவால் கொடுக்க முடியும்.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT