முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குறைந்த விலையில் கோகோ ஆபரணம்!

எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருக்கும் "மஞ்சள் பிசாசு' (தங்கத்துக்குத்தான் இந்தச் செல்லப் பெயர்)க்கு மாற்றாக புதிதாக களம் இறங்கியிருக்கிறது கோகோ ஆபரணங்கள். இவை பெண்களைக் கவர்ந்து இழுப்பதற்குக் காரணம், க

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:47 PM
பகிர்:

எட்டாத உயரத்தில் உட்கார்ந்திருக்கும் "மஞ்சள் பிசாசு' (தங்கத்துக்குத்தான் இந்தச் செல்லப் பெயர்)க்கு மாற்றாக புதிதாக களம் இறங்கியிருக்கிறது கோகோ ஆபரணங்கள்.

இவை பெண்களைக் கவர்ந்து இழுப்பதற்குக் காரணம், கோகோ ஆபரணங்கள் தங்கத்துக்குச் சற்றும் குறையாத வகையில் அதே மினுமினுப்புடன், ஜொலிஜொலிப்புடன் இருப்பது மட்டுமல்ல, இதன் விலைமலிவும்தான். கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மத்திய அரசு கயிறு வாரியமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறது. பெண்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் நெக்லஸ், வளையல்கள், கொலுசு, மோதிரம், நெத்திச் சுட்டி, தோடு, செயின்கள் தயாரிக்க இங்கே பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்த வகை மாடல்களுக்கு வெளிநாட்டிலும், வட இந்தியாவிலும் தற்போது அதிக கிராக்கி. திருமண விழாக்களில் மணப்பெண்ணை அலங்கரிப்பதற்கு இந்த வகை ஆபரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ணங்களில், பல டிசைன்களில் இந்த நகைகளைத்

தயாரிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இதுகுறித்து பெண் பயிற்றுனர்களிடம் கேட்ட போது, ""இந்தப் பயிற்சிகளுக்கு மத்திய கயிறு வாரியம் நிதி உதவி அளித்து வருகிறது. மலைவாழ் இன பெண்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் விதமாக முதல் கட்டமாக இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தென்னை நாரைக் கொண்டு இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

புடவைக்கு ஏற்ற வண்ணங்களில் இந்த ஆபணரங்கள் கிடைப்பதால் மேட்சிங்காக இருப்பதற்காக இதை ஆவலோடு வாங்கிச் செல்கிறார்கள்.

50}க்கும் மேற்பட்ட டிசைன்களில் தயாரிக்கப்பட்டு வரும் கோகோ ஆபரணங்கள் கல்லூரி பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைத்து வயதுப் பெண்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டுள்ளது. திருப்பூர், கோவை, ஏற்காடு, பொள்ளாச்சி போன்ற இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்திருந்த ஸ்டால்களில் இந்த ஆபரணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தபோது நல்ல வரவேற்பு இருந்தது.

கொடைக்கானல், டாப்ஸ்லிப், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களில் இந்த ஆபரணங்களை விற்பதற்கு வனத் துறையினர் ஏற்பாடு செய்து கொடுப்பதாகக் கூறியுள்ளனர். குறிப்பாக தமிழக அரசு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இந்த ஆபரணங்களைச் சந்தைப்படுத்திக் கொடுத்தால் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →