தமிழ் சினிமாவில் ஜப்பானியப் பெண் ஒளிப்பதிவாளர்!
""நான் இயக்கவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத தமிழ்ப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் எடுக்கப் போகிறோம். காரணம், கதையின் தளம் அமெரிக்காவில் உள்ளது. சில காட்சிகளை மட்டும் நம்முடைய ஏற்காட்டில
""நான் இயக்கவிருக்கும் இன்னும் பெயரிடப்படாத தமிழ்ப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் எடுக்கப் போகிறோம். காரணம், கதையின் தளம் அமெரிக்காவில் உள்ளது. சில காட்சிகளை மட்டும் நம்முடைய ஏற்காட்டில் எடுக்கப் போகிறோம்.
இந்தக் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தற்செயலாக உதித்த ஒன்று. விளம்பரப் படங்களுக்கும் தொலைக்காட்சித் தொடர்களுக்கும் ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டிருந்த சித்ரலேகா, தான் எழுதிய சிறுகதையொன்றை என்னிடம் காட்டினார். படித்துப் பார்த்தேன். ரொம்ப அற்புதமாக இருந்தது. இதைச் சினிமாவாக எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். எனவே படத்திற்கான வசனம், பாடல்கள் எழுதும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தேன்.
கதையின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடப்பதால் அமெரிக்காவுக்கு லொகேஷன் பார்க்கச் சென்றேன். நியூயார்க்கில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று ரொம்பநாளாக எனக்கு ஆசை. விண்ணைத் தொடும் கட்டிடங்கள் உள்ள நியூயார்க் என்னுடைய இந்தக் கதைக்குப் பொருந்தாது என்று பட்டது. அதன் பின் லாஸ் வேகாஸ், ஸôன்ஃபிரான்சிஸ்கோ என்று பல இடங்களையும் சுற்றிப் பார்த்தேன். இருந்தும் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. இறுதியில் லாஸ்ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்டில் அதிலும் குறிப்பாக அங்கே உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் பெரும்பாலான காட்சிகளை எடுப்பது என்று முடிவு செய்தேன். நம்முடைய கோடம்பாக்கம் போன்றது பெவர்லிஹில்ஸ். அதுதவிர, லாஸ் வேகாஸிலும், நியூயார்க்கிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தேன்.
நமது நாட்டில் போல அமெரிக்காவில் ஷூட்டிங் எடுப்பது அவ்வளவு எளிது அல்ல. நினைத்தவுடன் போய் எடுத்துவிட முடியாது. நிறைய ஃபார்மாலிட்டிஸ் உள்ளன. படத் தயாரிப்பில் நமக்கு உதவுவதற்கென்று அங்கே நிறைய லைன் புரடியூசர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 12 லைன் புரடியூஷர்களிடம் நான் கதை சொல்லியிருக்கிறேன். அவர்களிடம் கதை சொன்னால்தான் இந்தக் கதையை அங்கே எந்த இடத்தில் எப்படி எடுக்க முடியும் என்று அவர்கள் முடிவு செய்வார்கள். படம் எடுக்கத் தேவையான அனுமதிகளையும் பெற்றுத் தருவார்கள். பிற ஏற்பாடுகளையும் செய்து தருவார்கள்.
அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் படம் எடுக்க வேண்டுமென்றால், திரைக்கதையை அதற்கென்று உள்ள ஸ்கிரிப்ட் ரைட்டிங் ஸôப்ட்வேரில் எழுத வேண்டும். அந்த ஸôப்ட்வேர் திரைக்கதை எழுதும்போதே படம் எடுப்பதன் மிக மிக நுண்ணிய விஷயங்களைக் கூட கனகச்சிதமாகத் திட்டமிட உதவும். ஓர் ஆர்ட்டிஸ்ட் என்ன மேக் அப் போட வேண்டும் என்பதைக் கூட இந்த ஸôப்ட்வேர் மூலம் திட்டமிடலாம்.
"ஸ்லம் டாக் மில்லியனர்' படம் வெளிவந்த பிறகு ஹாலிவுட்டில் இந்தியப் படங்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு இருப்பதை அவர்கள் நம்முடன் அதைப் பற்றி ஆவலுடன் பேசும்போது தெரிந்து கொள்ள முடிந்தது.
ஹாலிவுட்டில் நான் இருந்தபோது ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான ஜப்பானிய பெண்ணான கீக்கோ நகஹராவைச் சந்தித்தேன். ரொம்ப பிஸியாக ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த அவரை அணுகினேன். அவர் இன்றைய மிக நவீனமான ரெட் கேமரா மூலம் படமெடுப்பதில் வல்லவர். மிக அதிக ரெஸல்யூஷன் உள்ள படங்களை அந்தக் கேமராவின் மூலம் எடுக்கலாம். அந்தக் கேமராவைப் பயன்படுத்தி எனது படத்தையும் எடுக்கலாம் என்று முடிவு செய்ததால் எங்கள் ஒளிப்பதிவாளருடன் இணைந்து வேலை செய்ய விருப்பமா? என்று அவரிடம் கேட்டேன். உடனே சரி என்று சொல்லிவிட்டார்.
கதை அமெரிக்காவில் நடப்பதால் நிறைய ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். அதற்கான தேர்வும் நடக்க இருக்கிறது.
இந்தப் படத்தின் ஹீரோ புதுமுகம். இரண்டு புதுமுகக் கதாநாயகிகள். மற்ற கலைஞர்கள் எல்லாரும் மக்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள்.
படம் பார்க்கும் ரசிகர்கள் படத்தின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்றோ, முடிவு இப்படித்தான் இருக்கும் என்றோ ஒருபோதும் ஊகிக்க முடியாத வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறேன்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் காமெடி இல்லை. குத்துப்பாட்டு இல்லை. சண்டையில்லை. 2 பாடல்கள் மட்டும் உண்டு. நம்புங்கள். ஆனாலும் இது தமிழ் சினிமாதான். ஆனால் வழக்கமான தமிழ் சினிமா இல்லை. வித்தியாசமான ஒரு காதல் கதையைக் கவித்துவமாகச் சொல்லும் தமிழ் சினிமாவாக இது இருக்கும்'' என்றார்.