ஞாயிறு கொண்டாட்டம்

நடிப்பிலும் நமீதா!

முழுக்க முழுக்க நமீதாவை நம்பி "அழகான பொண்ணுதான்' என்ற புதிய படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓர் இளம்பெண்ணை அவளை விட நான்கு வயது குறைந்த டீன் ஏஜ் மாணவன் துரத்தித் துரத்திக் காதலிப்பதுதான் கதை. படத்தைப் பற்றி

மனோஜ் கிருஷ்ணா

முழுக்க முழுக்க நமீதாவை நம்பி "அழகான பொண்ணுதான்' என்ற புதிய படம் எடுக்கப்பட்டுள்ளது. ஓர் இளம்பெண்ணை அவளை விட நான்கு வயது குறைந்த டீன் ஏஜ் மாணவன் துரத்தித் துரத்திக் காதலிப்பதுதான் கதை. படத்தைப் பற்றி இயக்குநர் திருவிடம் கேட்டபோது...

  ""டைட்டிலுக்கு ஏற்ப, இதுவரை நமீதா நடித்த படங்களிலேயே அவரை அழகாகக் காட்டியிருக்கிறோம்.



அழகு காட்டியதில் மட்டுமல்ல நடிப்பிலும் நமீதா தூள் கிளப்பியிருக்கிறார். படத்தின் மொத்தப் படப்பிடிப்பு 50 நாள்கள் என்றால் நமீதா நடித்தது மட்டும் 35 நாள்கள். இதிலிருந்தே அவருக்குரிய முக்கியத்துவம் தெரியும். அதேபோல இந்தப் படத்தில் நமீதாவுக்கு வசனம் குறைவு.



பேசாமல் முகபாவனை காட்டி நடித்ததுதான் அதிகம். நமீதாவைப் புகழ்ந்து யுகபாரதி எழுதிய "கன்னத்தில் விழுகின்ற குழி அழகு, ஆள் தின்னும் வளைவுகள் உனதழகு, நீ அழகான பொண்ணுதான்...' என்ற பாடலுக்கு சுந்தர்.சி பாபு, மிகப் புதுமையான மெட்டில் இசையமைத்திருக்கிறார்.



சி.டி. வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் பாடலை தங்கள் செல்ஃபோனில் ரிங் டோனாக வைக்காத இளைஞர்களே இருக்க முடியாது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT