ஞாயிறு கொண்டாட்டம்

ரயிலுக்கு டாட்டா சொல்லாத நகரத்துச்சிறுவர்கள்!

""எல்லா நிமிஷமும் ஏதோ ஒண்ணை நாம தேடுறோம், தெரிஞ்சுக்குறோம்; அல்லது அதுக்கான ஓட்டத்துல இருக்கிறோம். ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கணும் என்கிற தேடுதல்தான் நம்ம எல்லோரையும் செலுத்திக்கிட்டு இருக்கு. அந்தக் கண

ஜி. அசோக்

""எல்லா நிமிஷமும் ஏதோ ஒண்ணை நாம தேடுறோம், தெரிஞ்சுக்குறோம்; அல்லது அதுக்கான ஓட்டத்துல இருக்கிறோம். ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கணும் என்கிற தேடுதல்தான் நம்ம எல்லோரையும் செலுத்திக்கிட்டு இருக்கு. அந்தக் கண்டுபிடிப்புதான் என்னை சினிமா நோக்கி அழைத்து வந்தது'' தனது தேடுதல் முனைப்புக்கு விளக்கம் தந்து பேசுகிறார் புதுமுக இயக்குநர் தாமிரா. பாலசந்தர் பட்டறையில் சினிமா பயின்றவர். ஒருவிதத்தில் இவருடைய பிரவேசம் சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது. இன்று திரையுலகில் இருக்கும் பல நடிகர்களை உருவாக்கிய பாலசந்தரையும், பாரதி ராஜாவையும் இவருடைய "ரெட்டச்சுழி' படத்துக்காக நடிகர்களாக்கியிருக்கிறார். அந்தவிதத்தில் "ரெட்டச்சுழி' அதிர்ஷ்டம் பெற்ற திருநெல்வேலிக்காரர்.

"ரெட்டச்சுழி'?

"வித்தியாசமான கதை. பின்னியிருக்கோம், பொரட்டியிருக்கோம்'னு சொல்ல மாட்டேன். சராசரி வாழ்க்கையில் அசந்து, அலுத்து தியேட்டருக்கு வருகிற மக்களை மூணு மணி நேரம் சந்தோஷமா ரசிக்க வைக்கிற படமாக இது இருக்கும். பாலசந்தரும், பாரதிராஜாவும் இணைந்ததுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். என் இத்தனை வருஷ சினிமா வாழ்க்கையின் ஆதாரம் அவர்கள்தான். சுழின் னாலே சேட்டை என்றுதான் பொருள். ஊரில் இருக்குற ரெண்டு பெரிய மனிதர்கள் தங்களுக்குள் இருக்கும் ஈகோவோட பேரக் குழந்தைகளைச் சேர்த்துக்கிட்டு அடிக்கிற லூட்டிதான் கதை. இதை இரு குடும்பப் பின்னணியில் செய்து முடித்திருக்கோம். நிறைய கஷ்டப்பட்டிருக்கோம். அந்த கஷ்டங்கள், சிரமங்கள் எல்லாம் மக்களோட கைத்தட்டலில்தான் இருக்கிறது. அம்மா வயிற்றில் இருந்து குழந்தை பிறக்கும் போதே உடம்பு முழுக்க ஈரத்துடன்தான் வருகிறது. உழைப்பின் வியர்வையில் இருந்து, சோகத்தின் கண்ணீர் வரை சாகுறவரைக்கும் ஒரு துளி ஈரமாவது நம்ம கூட ஒட்டிக்கிட்டே இருக்கிறது. அதே போல் இந்தப் படத்துக்கான உழைப்பின் வியர்வையும் என் கூட இன்னும் இருக்கிறது. அது காலம் கடந்தும் இருக்கும். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவின் பெரிய இரு சாதனையாளர்களை இணைத்து வைத்துள்ளீர்கள். இது எப்படி நடந்தது?

""வாழ்க்கையில் சில விஷயங்கள் திட்டமிடாமல் நடந்து விடுவது மாதிரிதான் இதுவும். நல்லது நடந்தால் சிரிப்பும், கெட்டது நடந்தால் இன்னலும் அடையும் மனித வாழ்க்கையின் தாரக மந்திரம்தான் இந்தக் கதை. இந்த கதைக்காக இருவரையும் இணைத்ததில் மகிழ்ச்சி. இருவரிடமும் வேலை பார்த்திருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்துள்ள பாசம்தான் இந்தப் படம் உருவாக காரணம். சில விஷயங்கள் தனி மனித முயற்சிகளால் நடந்து முடிந்து விடாது. எதிர்பார்க்காதவர்களின் உதவிகளும் இதில் நிறைய இருக்கிறது. 75 வருஷ சினிமாவில் முக்கியமான திருப்பங்களைத் தந்த இருவரை இணைத்ததில் எனக்கு அளப்பறிய சந்தோஷம். இதுக்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலரைத் தூக்கிட்டு கோடம்பாக்கத்தின் மூலை முடுக்கில் என்னால சுத்த முடியும்.

தயாரிப்பாளர் ஷங்கர் என்ன சொல்றார்?

நல்ல கதையோடு யார் வந்தாலும் மரியாதையாக உட்கார வைத்துக் கதை கேட்டு மனசுக்குப் பிடித்திருந்தால் பத்தாவது நிமிஷமே பயப்படாமல் "பண்ணுங்க'னு சொல்ற நேர்மைதான் ஷங்கர் சார் ஸ்பெஷல். அவர்கிட்ட "ரெட்டச்சுழி'யின் கதையை சொல்லிய போது நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயம் இது. பாலசந்தரும், பாரதிராஜாவும் இதில் நடிக்கிறார்கள் என்றதும் என் மீது ஆச்சர்ய பார்வைகளை வீசிட்டு காத்திருந்தார். "எந்திரனி'ல் பிஸியாக இருந்துட்டு என் சினிமா பற்றியும் கேட்பார். அவரின் சினிமா ரசனைக்கு இந்த சினிமா நல்ல உதாரணமாக இருக்கும். இன்னொரு விஷயம் தெரியுமா? தற்போதைய யதார்த்த சினிமாவின் தயாரிப்பாளராக அவர்தான் இருக்கிறார்.

அப்ப இதுவும் யதார்த்த படங்களின் வரிசையில் சேருமா?

வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியும் யதார்த்தமாகத்தான் இருக்கிறது. சினிமாவில் அது முழுதாக இருக்கிறதா என எனக்குச் சொல்ல தெரியவில்லை. சொல்லப் போனால் யதார்த்தம் என்று இன்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதே பொய்தான். நிஜ வாழ்க்கை காதலில் எத்தனை பேர் டான்ஸ் ஆடி டூயட் பாடுகிறார்கள்? ஒரு சினிமாவில் எல்லாமே யதார்த்தமாக இருந்து விட்டால் ரசிப்பதற்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை பற்றியும் யோசிக்க தோன்றுகிறது. ஆனால் யதார்த்த கதைகளோடு கிராமத்தில் இருந்து பயணமான இளைஞர்கள் இங்கே நிறைய பேர் இருக் கிறார்கள். சிலர் ஜெயிச்சும் இருக்கிறார்கள். நானும் அந்த நம்பிக்கையோடதான் இங்கே வந்திருக்கேன்.  ஆனால் இப்படத்திலும் முழு தாக யதார்த்தம் இருக்கிறது சொல்லிவிட முடியாது.

எல்லா அறிமுக இயக்குநர்களுக்கும் கிராமிய யதார்த்தப் படங்களே மினிமம் கியாரன்டி கொடுப்பதால் நீங்களும் அதே பாதையில் செல்கிறீர்களா?

""இராமாயணம், மகா பாரதத்துக்குப் பிறகு இங்கே புதுக் கதைன்னு எதுவும் கிடையாது. எல்லாம் சொல்லியாகி விட்டது. அதை நம்ம பாணியில் எப்படி சொல்ல முடியும்னுதான் பார்க்கணும். தவிரவும், கிராமத்தில் எடுக்கப்பட்டால் மட்டும் அது யதார்த்தப் படம் என்று சொல்ல முடியாது. நகரத்து வாழ்க்கையோட யதார்த் தத்தை யார் சொல்றது? கடைகளில் சாம்பிராணி புகை பரப்பி சில்லறைக் காசு வாங்குபவர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு  கிடைக்கும்? 50 வருஷமா வாடகை வீட்டில் குடியிருக்கிற மிடில் கிளாஸ் குடும்பம் எத்தனை லட்ச ரூபாயை வாடகையாகக் கொடுத்திருப்பார்கள்? எலெக்ட்ரிக் டிரெயின்ல பூ விக்கிற பூக்காரம்மா ஏன் எப்பவும் பூ வெச்சுக்குறதில்ல? ராத்திரி 11 மணிக்குப் பிறகும் கடையில் இருக்குற டாஸ்மாக் சூப்பரவைசர் எப்போது வீட்டுக்குப் போவார்? ஏன்... கிராமத்து சிறுவர்களைப் போல் நகரத்துச் சிறுவர்கள் டிரெயினை பார்த்தா "டாட்டா' காட்டி பின் தொடர்வதில்லை? எல்லாமே யதார்த்தம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT