நகர்வலம் : விருதுகள்... விருதுகள்!
செப்டம்பர் 5 என்றால் பள்ளிக்கூட ஆசிரியர்களை மட்டுமே விருது கொடுத்துப் பாராட்டுவதைவிட, ஆசான் என்ற வகையில் எந்த வித்தையையும் கற்றுத் தரும் ஆச்சாரியர்களையும் கெüரவித்து வருகிறது இன்ஃபோ நெட்வொர்க் மானேஜ்ம
செப்டம்பர் 5 என்றால் பள்ளிக்கூட ஆசிரியர்களை மட்டுமே விருது கொடுத்துப் பாராட்டுவதைவிட, ஆசான் என்ற வகையில் எந்த வித்தையையும் கற்றுத் தரும் ஆச்சாரியர்களையும் கெüரவித்து வருகிறது இன்ஃபோ நெட்வொர்க் மானேஜ்மென்ட் கம்பெனி.
இந்த வருடம் கவிஞர் வாலி, கலாட்சேத்திரா இயக்குநர் நடனக் கலைஞர் லீலா சாம்சன், இசைக் கலைஞர் மதுரை டி.என்.சேஷகோபாலன், நடிகை மனோரமா, கணிதப் பேராசிரியர் வி.ராமச்சந்திரன், மருத்துவர் கமலா செல்வராஜ், ஆங்கில நாடக மேடை நடிகர் பி.சி.ராமகிருஷ்ணா ஆகியோருக்கு
"பரம ஆசாரியர்கள்' விருதும் திரைப்பட
இயக்குனர் ராஜீவ்மேனன், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கஞ்சிரா கலைஞர் செல்வ கணேஷ், அழகுக் கலை நிபுணர் லதா மோகன்(மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் மகள்), சமையல் கலை வல்லுனர் ரேவதி சண்முகம் (கண்ணதாசன் மகள்) ஆகியோருக்கு "ஆசார்ய' விருதும் வழங்கி கௌரவித்தார்கள்.
ஒருவர் பாக்கி இல்லாமல் எல்லோரும் கெüரவ விருந்தினர் பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவிடம் ஆசி பெற்றனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர்
முன்னாள் அட்டர்னி ஜெனரல் டாக்டர் கே.பராசரன். பாலமுரளிகிருஷ்ணா பற்றியும், ஆச்சி
மனோரமா பற்றியும் (வா வாத்யாரே, ஊட்டான்டே) மட்டுமே குறிப்பிட்டுப் பேசிய பெரியவர் பராசரன், மற்றவர்களைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள் பேசியிருக்கலாம். கவிஞர் வாலி பற்றி, "நானும் வாலியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் -ஸ்ரீரங்கம்!'
என்றதோடு சரி.
தலைமை உரையாக ஒரு கருத்துச் செறிவான சொற்பொழிவை பராசரனிடமிருந்து எதிர்பார்த்தவர்களுக்கு அவருடைய உரை சற்று ஏமாற்றமளித்திருக்கும்.
இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் கஞ்சிரா, மோர்சிங், கடம் வாத்தியங்களை வைத்துக் கொண்டு "விக்கு' விநாயக்ராம் மகன் உமாசங்கர் நிகழ்த்திய "லய-பிரளயம்' வித்தியாசமாக இருந்தது. ஜெயகணேஷ் தாள வாத்திய வித்தியாலய மாணவரான இவர், கஞ்சிரா, கடம், மோர்சிங் மட்டும் வாசிக்க வைக்கவில்லை. வாத்தியங்களைக் கீழே வைத்துவிட்டு, வாயிலும், கன்னத்திலும் தாளம் தப்பாமல் தட்டித் தட்டி ஒலி எழுப்பினார்களே, அது பிரமிக்க வைத்தது. அதுவும் ஒரே மாதிரி ஓசை அல்ல. வெவ்வேறு ஓசைகளை வெளிப்படுத்தினார்கள் இவர்கள். (வாத்தியத்தை மறந்து வைத்துவிட்டாலோ, உடைந்தேகூட போய்விட்டாலோ, இந்த மாதிரி வாயும் கன்னமும் வைத்துக் கொண்டே "கன்னக்கோல்' வாசித்து சமாளித்துவிடலாம் போல!)
ஐந்தாம் தேதிக்கு முந்திய நாளே, நான்கு கலைஞர்களுக்கு விருது கொடுத்துப் பாராட்டியது சத்குரு ஞானானந்த சங்கீத சம்மேளனம். ஒவ்வொரு வருடமும் நான்கு நாட்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்திய பிறகு, மூத்த இசை ஆசிரியர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, விருதும், பதக்கமும், நிதியும் அளித்துப் பாராட்டி வரும் சம்மேளன நிர்வாகிகள், இந்த முறை தேர்ந்தெடுத்து கெüரவித்தவர்கள் நான்கு பேர்.
திருச்சியில் இருந்துகொண்டு கர்நாடக இசையைப் பலருக்கும் கற்பித்து வரும் ஜெ.வெங்கட்ராமன், வயலின் கலைஞர் காஞ்சி ஜனார்த்தனம், மிருதங்க கலைஞர் பி.சீனிவாசன், கட வாத்தியக் கலைஞர் கோவை மோகன்ராம் என்று இவர்கள் சென்னையைவிட்டுத் தள்ளியே இருப்பவர்கள்.
இந்தத் துறையில் குருபக்தி அவசியம் என்றார் திருச்சி வெங்கட்ராமன்.
1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த ஞானாந்த சங்கீத சம்மேளனம். "98 வரை தென்னாங்கூரில்தான் இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.
பின்னர்தான் பத்து ஆண்டுகளாகச் சென்னையிலேயே கொண்டாடுகிறோம்!' என்றார் ஆர்.கிருஷ்ணசாமி "இதைத் திட்டமிட்டு நடத்த இசைக் கலைஞர்களிடமே விட்டுவிடுகிறோம்!' என்கிறார்.
சரியாக இது வெள்ளிவிழா ஆண்டு. சங்கீத சம்மேளனத்தின் நான்கு நாள் நிகழ்ச்சிகளுக்கும் அரங்கம் நிரம்ப வந்த ரசிகர்கள் இருக்கையில், சுவாமி ஹரிதாஸ் கிரி தொடங்கி வைத்த இந்த சம்மேளனம், வெள்ளிவிழா என்ன, பொன்விழா, பவளவிழா என்று கொண்டாடாமலா போகும்?
இது அண்ணா நூற்றாண்டு விழா நேரம். ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து சொன்னார் நகைச்சுவை நடிகர் பி.ஆர்.துரை: 1957 ஆம் ஆண்டு, ஸ்ரீதேவி நாடக சபாவின் மூலம் நடைபெற்ற "பாட்டாளி பெற்ற பைங்கிளி' நாடகத்துக்குத் தலைமை தாங்கிப் பேசினார் அண்ணா. நாடகத்தில், ஹிந்து, தினமணி, சுதேசமித்திரன் என்று பேப்பர் விற்றுக்கொண்டு வருபவரிடம், "திராவிட நாடு பேப்பர் இருக்கா?' என்று பிராமணப் பையனாக நடித்த ஏழு வயதுச் சிறுவன் கேட்டவுடன் கரகோஷம் அடங்க நீண்ட நேரம் ஆயிற்றாம்.
""இந்த நாடக கம்பெனியின் மெயின் காமெடியன் இந்தச் சிறுவன்தான் என்று தெரிந்துகொண்டேன். நகைச்சுவையுடன் பேசும் இந்தச் சிறுவன், எதிர்காலத்தில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகனாக விளங்குவான்!'' என்று ஆசி கூறினாராம் அண்ணா.
அன்று எடுத்த புகைப்படத்தில் ""கையில் விசிறியுடன் நிற்கும் சின்ன பையன் நான்தான்!'' என்றார் கலைமாமணி பி.ஆர்.துரை.
அந்தக் காலத்தில் நாடக நடிகர்கள் என்ன பாடுபட்டார்கள் என்பதை அவர் எழுதத் தொடங்கியிருக்கும் சுயசரிதையில் படிக்கலாம் என்கிறார் துரை ஒரு சஸ்பென்úஸôடு.