முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிட்டி நூற்றாண்டு - ஒரு முன்னோட்டம்!

வழக்கறிஞர், வானவில் பண்பாட்டு மைய அமைப்பாளர் என்ற தகுதிகளோடு, பாரதி அன்பர் கே.ரவி கட்டுரையாளர், கவிஞர் என்ற தகுதிகளையும் பெற்றுவிட்டார். சென்ற வாரம் அவருடைய  "சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்ற கட்டுரைத் த

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:28 PM
பகிர்:

வழக்கறிஞர், வானவில் பண்பாட்டு மைய அமைப்பாளர் என்ற தகுதிகளோடு, பாரதி அன்பர் கே.ரவி கட்டுரையாளர், கவிஞர் என்ற தகுதிகளையும் பெற்றுவிட்டார்.

சென்ற வாரம் அவருடைய  "சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்ற கட்டுரைத் தொகுதியையும், "உன்னோடு நான்' என்ற கவிதைத் தொகுப்பையும் அடையாறு சுப்ரமணியம் அரங்கில் வெளியிட்டார்கள். (இது நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தன் தகப்பனார் பெயரால் உருவாக்கியிருக்கும் அரங்கம். இலக்கியக் கூட்டம் ஒன்று நடைபெறுவது இதுதான் முதல் முறையாக இருக்கும் என எண்ணுகிறேன்.)

கட்டுரை நூலை வெளியிட்டுப் பேசிய அரங்க.ராமலிங்கம், வெறும் அடக்கமான சொற்பொழிவாளர் என்று நினைத்திருந்தோம். அவர் ஆவேசச் சொற்பொழிவாளரும்கூட என்று அன்றைக்குத்தான் தெரிந்தது.

"திருவள்ளுவருக்குச் சிலை வைப்போம், வள்ளுவர் கோட்டம் கட்டுவோம், ஆனால் அவருடைய திருக்குறள் முதல் அதிகாரத்தை ஏற்கமாட்டோம் என்பது விந்தையாக இருக்கிறது. அதேபோல், செம்மொழி மாநாட்டுக்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

ஆனால், அதைத் தொடர்ந்து வரும் வரிகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்வதும் புதிராக இருக்கிறது' என்று ஆவேசப்பட்டார். அரங்க ராமலிங்கம் இலக்கியத் துறையைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, ஆன்மிகச் சொற்பொழிவாளரும்கூட என்பதால் அவருக்கு ஆவேசம் வந்திருக்கலாம்.

வழக்கறிஞர் ரவியின் ஒவ்வொரு கட்டுரையையும் நுணுக்கமாகப் படித்து, சில வரிகளை அடிக்கோடிட்டுப் பேசினார் அரங்க ராமலிங்கம். "நீங்கள் உண்மையாகவே கோர்ட்டுக்குப் போய் வக்கீல் தொழில் செய்கிறீர்களா? இத்தனை நூல்கள் படிக்கவும், இப்படிக் கட்டுரைகள் எழுதவும் உங்களுக்கு எங்கேயிருந்து நேரம் கிடைத்தது?' என்று வியந்தார் பேச்சாளர். கால நிர்வாகத்திலும் ரவி கை தேர்ந்தவர் என்பது அன்று புரிந்தது!

ஓவியர் லியோனின் இயற்கை ஓவியங்கள், எனக்கு மறைந்த ஓவியர் ஈசுவரனின் படைப்புகளை நினைவூட்டின. நீண்ட மரங்களும், பச்சைப் பசேல் என்ற இலைகளின் பின்னணியும், இடையே சூரிய வெளிச்சம் மெலிதாகப் பாயும் அழகும் அப்படியே ஓவியர் ஈசுவரனை நினைவுபடுத்துகின்றன. திருமலை, அருண் மற்றும் விஸ்வப்ரியாவின் ஓவியங்களுடன் நந்தனம் ஆகர்ஷ் ஃபைன் ஆர்ட் காலரியில் இவருடைய ஓவியங்கள் ஏப்ரல் 15 வரை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை நகரில் இயங்கி வரும் பல நகைச்சுவை கழகங்களில் ஒன்றான பெசன்ட் நகர் சங்கமும், "சிட்டி'யின் நூற்றாண்டு விழாக் குழுவும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது.

சிட்டி கிண்டலில் கெட்டிக்காரர். நகைச்சுவை அவருடன் கூடவே பிறந்தது. அவருடைய "கேலியும் போலியும்' கிண்டல் கவிதைகளைப் படித்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்கள். பாரதி பக்தரான சிட்டி, இந்தச் சிறு தொகுப்பில் எழுதியிருக்கும் "பாட்டி மடிக்கொடி பாரீரும், மிச்சமில்லை, மிச்சமில்லை, மிச்சமென்பதில்லையே'வும் அவருடைய நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டுகின்றன.

ஆனால், தி.ஜானகிராமனின் "நளபாகம்' நாவலுக்கு "சிட்டி' எழுதியிருக்கும் 32 பக்க முன்னுரை தி.ஜானகிராமனின் படைப்புகள் அனைத்தையும் அலசி எழுதப்பட்ட ஓர் ஆய்வுக் கட்டுரை.

சிட்டியின் நூற்றாண்டு விழா வரும் மே-8 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட இருக்கிறது என்று அவர் குமாரர் விசுவேசுவரனும், வேணுகோபாலும் அறிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →