முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நகர்வலம்: வாக்கேய - பரதம்!

பாடல் இயற்றுவதோடு மட்டும் நில்லாமல், அதற்கு மெட்டும் அமைத்துக் கொடுக்கும் பணியைச் செய்பவர்களை "வாக்கேயகாரர்' என்பார்கள். ஆனால் தியாகராஜர் - முத்துசாமி தீட்சிதர் - சியாமா சாஸ்திரி ஆகிய மூவரைத்தான் பெரு

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:17 PM
பகிர்:

பாடல் இயற்றுவதோடு மட்டும் நில்லாமல், அதற்கு மெட்டும் அமைத்துக் கொடுக்கும் பணியைச் செய்பவர்களை "வாக்கேயகாரர்' என்பார்கள். ஆனால் தியாகராஜர் - முத்துசாமி தீட்சிதர் - சியாமா சாஸ்திரி ஆகிய மூவரைத்தான் பெரும்பாலானவர்களுக்கு "வாக்கேயகாரர்' எனத் தெரியும். அவர்களைப் போலவே இசைக்குத் தொண்டாற்றியவர்கள் பெயர்கள் எண்ணிலடங்கா.

பரதநாட்டியத்தை "பார்வைக்குத் தெரியும் கவிதை' என்பார்கள். முத்துசாமி தீட்சிதரின் சீடர்களான தஞ்சை நால்வர் எனப்படும் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரும் பரதநாட்டியத்துக்கு வடிவமைத்துக் கொடுத்ததோடு, ஏராளமான சாகித்தியங்களையும் வழங்கியிருக்கிறார்கள். இவர்களுக்குப் பின் வந்த நாட்டிய ஆசான்கள் சிலரும் அவர்களைப் பின்பற்றி இசை மூவருக்கு முன்னும் பின்னும் தோன்றிய வாக்கேயகாரர்களின் பாடல்களை நாட்டிய மேடைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் புதையல் என்றும், பொக்கிஷம் என்று பெருமைப்படத்தக்க பாடல்கள் சிலவற்றையாவது இன்றைய இளைய தலைமுறை நாட்டியக்கலைஞர்கள் அறிய வேண்டும், அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன், நாரத கான சபா தன் பதினான்காவது நடன விழாவுக்கு "வாக்கேய-பரதம்' என்ற தலைப்பிட்டு, மறைந்த இசை மேதைகளான வீணை குப்பய்யர், திருவொற்றியூர் தியாகய்யர், மகா வைத்தியநாத சிவன், ராமசுவாமி சிவன், சுப்பராம தீட்சிதர், மைசூர் வாசுதேவாச்சார், நீலகண்ட சிவன், வீணை கிருஷ்ணமாச்சாரியார், டைகர் வரதாச்சாரியார், எம்.டி.ராமநாதன், ராமநாதபுரம் (பூச்சி) சீனிவாசய்யங்கார், நாட்டிய ஆசான் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை ஆகியோர் இயற்றிய சாகித்தியங்கள் சிலவற்றை நடன வடிவில் வழங்க முன் வந்திருக்கிறது.

தஞ்சை நால்வரின் கடைசி சகோதரர் வடிவேலுவின் இருநூறாவது பிறந்த ஆண்டு இந்த வருடம் கொண்டாடப்படுவதால், முதல் நாள் நிகழ்ச்சியாக தஞ்சை நால்வரின் பாடல்களைக் கொண்ட நடன நிகழ்ச்சியை (ஆகஸ்ட்-30) துவக்க நாளன்று வழங்குகிறார் புகழ்மிக்க நடனக் கலைஞர் அலர்மேல்வள்ளி. தொடர்ந்து ஒரு மாலைப் பொழுதில் இரு நடனக் கலைஞர்கள் என்ற முறைப்படி, ஐசுவர்யா நாராயணசாமி, மஞ்சரி, டி.எம்.ஸ்ரீதேவி, பிரவீண்குமார், திவ்யா சிவசுந்தர், காயத்ரி பாலகுருநாதன், ராதிகா வைரவேலவன், ஊர்மிளா சத்தியநாராயணன் ஆகிய எட்டு இளம் நடனக் கலைஞர்கள் புதிய சாகித்தியங்களை மேடையில் நடனமாக அறிமுகப்படுத்துகிறார்கள்.

பாடல்களைத் தேர்ந்தெடுத்து பாடிக் காண்பித்து, அவற்றின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல ஒவ்வொரு நடனக் கலைஞருக்கும் ஒரு பாடகரை ஒதுக்கியிருக்கிறது "நாட்டியரங்கம்'. சுகுணாவரதாச்சாரி, ஆர்.வேதவல்லி, டி.எம்.கிருஷ்ணா, ஆர்.கே. பத்மநாபா, பி.எஸ்.சரசுவதி ராம், ரமா ரவி, டி.கே.பத்மநாபன், ஆலப்புழை வெங்கடேசன், சந்திரா தண்டாயுதபாணி ஆகியோர் இந்தப் பணியைச் செய்வார்கள்.

வருடந்தோறும் ஒரு மூத்த நடனக்கலைஞரைக் கெüரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு கலாúக்ஷத்ராவில் நடன ஆசானாகப் பணிபுரிந்த நடனக் கலைஞர் சி.கே. பாலகோபால் அந்த கெüரவத்தைப் பெறுகிறார். மூத்த நடனக் கலைஞர் விருது சித்ரா தாசரதிக்கும், நடனக்குழுவில் மிருதங்கம் வாசிக்கும் ஜி.விஜயராகவனுக்குச் சிறந்த கலைஞர் விருதும், இளம் நடனக் கலைஞர் விருது ராதிகா வைரவேலவனுக்கும் அன்று வழங்குகிறார்கள்.

இசையும் கற்று நடனத்திலும் தேர்ந்த வைஜயந்தி மாலா பாலி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். பெரும்பாலும் நடனக் கலைஞர்கள் மிகக் குறைவாகவே இசை பற்றி அறிந்திருக்கிறார்கள். நடனத்தில் இசை முக்கியத்துவம் பெறும்போதுதான் நிகழ்ச்சியே முழுமை பெறுகிறது. இளம் நடனக் கலைஞர்கள் இசைத்துறையிலும் ஆர்வம் காண்பிக்க இந்த நிகழ்ச்சி ஒரு தூண்டுகோலாக அமையும்.

ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழா நடனக் கலைஞர்களுக்கு மட்டுமின்றி இசைக் கலைஞர்களுக்கும் சவாலாகவே இருக்கும். ஆனால் உழைப்புக்கு அஞ்சாத இக் கலைஞர்களின் பங்களிப்பு, "வாக்கேய - பரதம்" நிகழ்ச்சி வெற்றி பெற உதவும்!

கையில் ஒரு சிறு குறிப்புகூட வைத்துக் கொள்ளாமல் நிகழ்ச்சிகளைக் கோவையாக எடுத்துச் சொல்வதில் வல்லவரான "கீழாம்பூர்' (பொறுப்பாசிரியர்: "கலைமகள்'), ஏ.என்.எஸ்.

ஃபவுண்டேஷன் சார்பில், ஞாயிறன்று ஏ.என்.சிவராமன் பற்றியும் கே.வி.கிருஷ்ணசாமி அய்யர் பற்றியும் ஆற்றிய உரை, சித்திரம்போல் அமைந்திருந்தது.

இந்தியன் வங்கி தோன்றுவதற்கும், வெங்கடரமணா ஆயுர்வேத மருத்துவமனை நிறுவுவதற்கும், சமஸ்கிருத கல்லூரி தொடங்குவதற்கும் காரணமாக இருந்தவர் கே.வி.கிருஷ்ணசாமி அய்யர்.  ஆனால் தமிழ் மொழி மீது அவர் வைத்திருந்த பற்றும், மகாகவி பாரதி மீது அவர் கொண்டிருந்த அன்பும் பற்றிப் பலரும் அறிந்திராத செய்திகளைச் சொன்னார் கீழாம்பூர். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம் ஆகிய நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு, திருச்சி - தஞ்சை - கும்பகோணம் பகுதிகளுக்குச் செல்லும்போதெல்லாம், அவற்றின் மீது விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பதுஅய்யரின் வழக்கமாம். ஓதுவார்களைப் பாடச் சொல்லிக் கேட்டுவிட்டு சன்மானம் வழங்கிக் கெüரவிப்பாராம். பாரதியாரை ஜி.ஏ.நடேசன் அவர்கள் மகாத்மா காந்தியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியபோது, பாரதியார் அந்த இடத்திலேயே பாடிய "செந்தமிழ் நாடெனும் போதினிலே', "எந்தையும் தாயும்', "வந்தே மாதரம்' ஆகிய பாடல்களை அவரிடமிருந்து பெற்று அவற்றை அச்சிட்டு அத்தனை பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தாராம். பாரதிக்கு அதற்கான சன்மானமாக அன்றைக்கு நூறு ரூபாய் வழங்கினாராம். கீழாம்பூர் தெரிவித்த இன்னொரு தகவல் காந்தியடிகளுக்குத் தமிழ் தெரியும்

என்பது.

தலைமையுரையில் "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தாம் "தினமணி'யில் பணிபுரிந்தபோது ஏ.என்.எஸ். அவர்களிடம் பெற்ற பயிற்சிகளையும், அன்பையும் தெரிவித்தார். ஏ.என்.எஸ். சில நாட்கள் தாம் கொண்டு வரும் (உப்புப் போடாத) மோர் சாதத்தைத் தமக்கு அளித்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

சில மேதைகளுடன் பழகும்போது உண்டாகும் பரவசம், மகிழ்ச்சியையும் தாண்டியது.

இருவரின் உரையிலும் அந்தப் பரவசத்தின் சாயல் மட்டுமல்ல, மேன்மையும் வெளிப்பட்டது.

திஷானி தோஷி ஆங்கிலக் கவிதை உலகில் புகழ் பெற்றிருக்கும் இளம்பெண். சென்னையில் வசிப்பவர். அவருடைய முதல் நாவல் "த ப்ளஷர் ஸீக்கர்ஸ்' அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது (பால்ரூம், கன்னிமரா) வந்திருந்த கூட்டம் அவருக்கு இருக்கிற புகழை அடையாளம் காண்பித்தது. குஜராத்தி - ஆங்கிலப் பெற்றோர், திஷானிக்கு. எனவே வேல்ஸýம் சென்னையும் நாவலில் முக்கிய இடம்பெற்றிருந்தன.

அவருடன் உரையாடியவர் லண்டன் வாழ் தமிழர் சுசீலா ராமன். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடகி என்று அறியப்பட்டவர். திஷானியின் சென்னை வாழ்க்கை அவருக்கு அளித்திருக்கும் தனி மகிழ்ச்சியை உரையாடலில் வெளியிட்டார்.

திஷானியின் முதல் நாவல் "த ப்ளஷர் ஸீக்கர்ஸ்' ஏற்கெனவே அயல்நாடுகளில் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டதாம். விற்பனையில் சக்கைப் போடு போடுகிறதாம்!

முழு கட்டுரையைப் படிக்க →