""அது என் னவோ தெரி யல. மழை கால மும், பனிக் கால மும் நம்மை விட்டு சீக் கி ரமே போயி டுது. வெயில் மட் டும் நமக்கு சலிக் கிற வரைக் கும் அடிக் குது. மழை யும், பனி யை யும் ரசிக் கிற மனசு, வெயிலை அந்த
அள வுக்கு ரசிக் கல'' ஜன் னல் கம் பி யில் பள ப ளக் கும் வெயிலை பார்த் த ப டியே பேசு கி றார் ஒளிப் ப தி வா ளர் ரவி வர் மன். தமிழ் சினி மா வின் டாப் கேமி ரா மேன்.
தேடல்...
தேடு வ தற்கு வாழ்க்கை திர வி யமா என்ன? "தேடிக் கொண் டே யிரு' என மனசு ஒரு பக் கம் சொன் னா லும் தேடு த லுக்கு ஒண் ணுமே இல் லனு தோணுது. தஞ் சா வூர் லர்ந்து வந்து மவுண்ட் ரோட்டை பார்த்து பிர மித்த மன சு தான் இப் போ தும் இருக்கு. மும்பை போன பின் சென்னை பிடிக் கல. அமெ ரிக்கா போன பின் மும்பை பிடிக் கல.
அப்ப பிடிச் ச தெல் லாம் இப்ப பிடிக் கல. நிரந் தர தேடல், லட் சி யம் என எது வும் இல் லாத வாழ்க்கை. ஒரு இடத்தை அடை யும் போது அடுத்த இடத் துக்கு மனசு தானா கவே தாவி டுது.
டெக் னா ல ஜியோ, லைட்டோ எதுவோ ஒண்ணு கையில கிடைக் காம இன் னும் ஆட் டம் காட் டுது. அதைத் தேடி முடிக் கும் முன்னே நான் காணா மல் கூட போயி ட லாம். இடத் துக்கு இடம் மாறி நின்னு வேடிக்கை பார்க் குற குரங்கு மன சு தான் எப் போ தும் பிடிக் குது.
செண் டி மென்ட்...
என் ன வாக இருக் கும். வாழ்க் கை யோட ஒவ் வொரு கணத் தை யும் நேசிக் கி றேன். எல்லா மனு ஷங்க மீதும் அன்பு செலுத் து றேன். துக் கம், காதல், காமம், சந் தோ ஷம் என சில விஷ யங் கள் ஒரு சமயம் நேரம் கிடைக் குது. ஒரு சமயம் கிடைக்க மாட் டேங்குது. அதுக் காக இந்த வாழ்க் கையை என் னால் விட்டுத் தர முடி யாது.
இந்த நிமிட வேண் டு தல் க ளும், பிரார்த் த னை க ளும் யாருக் கா னது என தெள்ளத் தெளிவா சொல் லிட முடி யும். அதில் ஒன் றி ரண்டு இந்த உல கத் துக் கா னதா இருக் க ணும்னு நினைக் கி றேன். அதி காலை பொழு தில் தெரு வுக் குத் தெரு நாலு மரக் கன்றை நட் டு கிட்டே வாக் கிங் செல் ல ணும்னு தோணுது.
கிராம வாழ்க்கை தொலை யும் முன்னே மக னை யும் மக ளை யும் கூட் டிக் கிட்டு என் கிரா மத்தை காட்டி நான் வாழ்ந்த வாழ்க் கையைப் பாருங் க டான்னு ஒரு மு றை யா வது சொல் லி ட ணும்னு ஆசை இருக்கு. குழந் தை க ளைப் பார்த்தா நாலு வார்த்தை தமிழ் சொல் லிக் கொடுத்து, ரெண்டு வார்த்தை இங் கி லீஸ் கத் துக் க ணும்னு தோணுது.
இப் ப டியே ஆயுசு முழுக்க வாழ்ந் துட்டு போயி ட ணும். சிந் தனை எல் லாம் அழகா இருக் க ணும். இதை எந்த செண் டி மென் டும் உடைச் சி டக் கூடாது.
எதிர் கா லம்....
தமிழ், ஹிந்தி, மலை யா ளம், கன் ன டம் என சில சினி மாக் களை முடிச் சாச்சு. படைப் பு க ளில் எது வுமே பிர மிப்பு தரல. அப்ப சரின்னு தெரிஞ் ச தெல் லாம் இப்போ தப்பா தெரி யுது. ஏமாற் றங் கள் எல் லாம் என்னைச் சார்ந் த தா கவே இருக்கு. என் னென்ன தவ று கள் செஞ் சி ருக் கேன், இனி என்ன செய் ய ணும் செய் யக் கூ டா துனு நினைக் கி றேன்.
அது எல் லாத் தை யும் ஒரு புத் த க மாக போட ணும்ணு பிளான் இருக்கு. சினி மாவ நேசிச்சு என்னை மாதிரி கிரா மத்தி லி ருந்து வர் ற வங் க ளுக்கு அது தெளிவு கொடுக் கும். மற் றப் படி ஒண் ணும் இல்ல.
சினிமா இயக் கம்...
இயக் கு ந ரின் எண் ணங் க ளைப் பட மாக் கி ய தால் நானும் இயக் கு ந ரா கி விட் டேன். நல்ல சினி மான்னு ஏதா வது நானும் பதிவு செய் ய ணுமே. அதுக் கு தான் இந்த "மாஸ் கோ வின் காவேரி'. ஒளிப் ப தி வா ளன் இயக் கு ந ரா வது ஒண் ணும் புதி தல்ல. இயக் கு நர் க ளின் பார் வை யில் காட் சி யைப் பட மாக் கும் போது ஒளிப் ப தி வா ளன் இயக் கு ந ரா கி றான்.
கவன ஈர்ப்பு....
ஈரான் இயக் கு நர் மெக் மல். ஆதித்யா ஹோட்ட லில் தங்கி நம்ம பிர சாத் ஸ்டூடி யோ வில் தான் வேலை முடிப் பார். தின மும் அங் கி ருந்து ஸ்டுடி யோ வுக்கு நடந்து வந் து தான் போவார். யதார்த்த சந் திப் பில்.... கதைச் சொன் னார். தின மும் நடந்து வந்த கோடம் பாக் கம் சாலை யைப் பற் றி யது அந் தக் கதை. அந் தப் படம் வந் தால் கோடம் பாக் கத் தின் டிரா பிக் கிளீன் ஆகும்.
அப் ப டி யொரு முடிவு அந் தக் கதை யில் இருக்கு. இப்போ "அவ தார்' படத் தைக் கூட பெருசா பேசிக் கி றாங்க. 10 வரு ஷம் கழிச்சு பார்த் தா லும் அந் தப் படம் புதுசா தெரி யும். அப் ப டி யொரு டெக் னா லஜி அதுல இருக்கு. சத் ய ஜித்ரே, அகி ரா கு ர சேவா போன்று கவ னம் ஈர்த்த மனி தர் கள் நிறைய பேர் இருக் காங்க. இப் படி ஒரு முன் னோ டி யான கதவை திறந்து வைத்து பய ணம் செய்ய வைக் கிற இவர் க ளின் உய ரம் தான் என்னை எங் கேயோ அழைக் கி றது.
பிர மிப்பு...
கடல் தான். கோடி உயிர் களை சுருட் டிட்டு இன் னும் எதுக்கு காத் தி ருக் குனு தெரி யல. உள் வாங் கல், சீற் றம்னு புதுசு புதுசா ஏதேதோ செய்தி வருது. உல கத் துக்கு அழிவு இருக்கு. அது எப் படி, எப் போது எனத் தெரி யா மல் இருந்த நமக்கு கடல் ஏதோ ஒண்ணு சொல் லிட் டுப் போகுது. ஒவ் வொரு நாளும் பயம் காட் டுற கட லை யும் அலை யை யும் நினைச்சா உள் ளூர கொஞ் சம் நடுக் கம் இருக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.