ஞாயிறு கொண்டாட்டம்

ஒரு பாடலுக்கு ஆடியது ஏன்?

விகடன் டாக்கீஸின் "சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனுயா, அதையடுத்து "மதுரை சம்பவம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்தார். தற்போது "நஞ்சுபுரம்' என்ற படத்தில் ஒரு பாடல

மனோஜ் கிருஷ்ணா

விகடன் டாக்கீஸின் "சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனுயா, அதையடுத்து "மதுரை சம்பவம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடித்தார். தற்போது "நஞ்சுபுரம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். "ஏன் வாய்ப்புகள் இல்லையா?' எனக் கேட்டபோது...

""அப்படியெல்லாம் இல்லை. இப்போதும் "தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகமான "நகரத்தின் மறுபக்கம்' படத்தில் சுந்தர்.சி யுடன் நடித்து வருகிறேன். இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். "நஞ்சுபுரம்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட காரணம் அந்தப் படத்தின் நாயகன் ராகவ்தான். "ராஜா ஆறு ராணி யாரு?' நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ராகவ் நண்பரானார்.

அவர்தான் "நஞ்சுபுரம்' கதையைச் சொல்லி, ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். படத்தின் இயக்குநர் சார்லஸýம் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அதனால்தான் நடனமாடினேன். ஒரு பாடலுக்கு நடனமாடுவதால் வாய்ப்புகள் குறைந்துவிட்டன என அர்த்தம் இல்லை. முன்னணியில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் இப்போதும் ஒரு பாடலுக்கு நடனமாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?'' என்றார் அனுயா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT