முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மனிதரில் இத்தனை நிறங்களா?

விஜய் டிவி யில் புதி தாகத் துவங் கி யி ருக் கும் தொடர் "பிரி வோம் சந் திப் போம்'. மனி தர் க ளின் நிறத்தைக் கதைக் கரு வா கக் கொண்டு உரு வா கி யி ருக் கும் தொடர் இது. இதில் இரு நா ய கி க ளில் ரேவதி கேரக

Updated On : 28 டிசம்பர், 2023 at 5:08 PM
பகிர்:

விஜய் டிவி யில் புதி தாகத் துவங் கி யி ருக் கும் தொடர் "பிரி வோம் சந் திப் போம்'. மனி தர் க ளின் நிறத்தைக் கதைக்

கரு வா கக் கொண்டு உரு வா கி யி ருக் கும் தொடர் இது. இதில் இரு நா ய கி க ளில் ரேவதி கேரக் ட ரில் நடிக் கும் கல் யா ணி யி டம் பேசி னோம். குழந் தைத்தனம் மாறாத அவ ரு டைய பேச்சி லி ருந்து...

"பிரிவோம் சந்திப்போம்' என்ன மாதிரி கதை? அதில் உங்கள் கதாபாத்திரம் என்ன?

ஜோதி-ரேவதி என்ற இரு சகோதரிகளுக்கிடையே நடக்கும் கதைதான் "பிரிவோம் சந்திப்போம்'. மனிதர்கள் மனதில் பதிந்து கிடக்கும் நிறவேறுபாடுகளை வைத்து பின்னப்பட்டிருக்கிறது கதை. ரேவதி நல்ல சிவந்த நிறமாகவும் ஜோதி கருப்பாகவும் இருக்கிறார்கள். அதில் நான் ரேவதியாக நடிக்கிறேன். தாய், தந்தையை இழந்த நான் ஜோதியின் வீட்டில் வளர்வேன். எங்களுக்குள் நிற வேறுபாடு இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் எப்பொழுதும் ஒற்றுமையாகவும் இருப்போம். எங்கள் இருவருக்கும் நிறம் ஒரு பிரச்னை இல்லை.

இது பிடிக்காத ஜோதியின் தாயும், பாட்டியும்  எங்களைப் பிரிக்க முயற்சி செய்வார்கள். ஒரு கட்டத்தில் எங்களுடைய நிறமே பல சிக்கல்களை உருவாக்குகிறது. கருப்பாக இருக்கிற பெண் ஒருவித பிரச்னையை சந்தித்தால், சிவப்பாக இருக்கிற பெண் வேறு விதமான பிரச்னையைச் சந்திக்கிறாள். இப்படி மனித நிறத்தினால் விளையும் விபரீதங்களை எப்படி எதிர்கொள்ளுகிறோம் என்பதுதான் கதை. இதை உணர்வுபூர்வமானப் பாசப் போராட்டமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரசூல் சார். இந்த தொடர் இந்தியில் மிகப் பரபரப்பாக ஓடிய "விதாய்' என்கிற தொடரின் ரீமேக்.  

டி.வி.யில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கால் பதித்த நீங்கள் இந்தத் தொடரின் மூலம் நடிகையாகி இருக்கிறீர்கள்?... அதைபற்றி சொல்லுங்கள்?

இந்தத் தொடரின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக  அறிமுகமாகியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நான் சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும், தொடர்களிலும் நடித்திருக்கிறேன். பிரபுதேவா சார் நடித்த "அள்ளித் தந்த வானம்' என்ற படத்தில் காசு காசு என்ற ஒரு ஹிட்டான பாடல் காட்சியில் நடித்திருந்தேன். அதன்பின் தான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியானேன். இதைத் தவிர மலையாளத்தில் இரண்டு, மூன்று படங்கள் நடித்திருக்கிறேன். "பருந்து' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். மோகன்லால் சார், மம்மூட்டி சாருடன் எல்லாம் நடித்திருக்கிறேன். அதனால் நடிப்பது புதுசாக தெரியவில்லை.

வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா?

வேறு  தொடர் எதுவும்  தற்போதைக்கு நடிக்கவில்லை. ராஜ் டிவியில் பீச் கேர்ள்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். இதைத் தவிர மேடைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன். மற்றபடி  நான் கிளாசிக்கல் டான்ஸர் என்பதால் பல வெளிநாடுகளுக்குச் சென்று நடன நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன்.

சினிமாவில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?

தமிழில்  பெரியதிரையில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நானும் படத்தில் நடித்துவிட்டேன் என்று வந்து போக எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. கொஞ்சம் தாமதமானாலும் நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுபோன்ற கதை அமையும்போது கண்டிப்பாக நடிப்பேன். 



நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது, நடிப்பது இவற்றில் எதைச் சுலபமாக உணர்ந்தீர்கள்?

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுதானே என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது, ஏனென்றால் அங்கே கட் சொல்லி ஒன்ஸ்மோர் எல்லாம் போக முடியாது. கல்யாணியின் திறமைகளை வெளிப்படுத்தவேண்டும். ஆனால் நடிப்பு அப்படியில்லை இயக்குநர் உருவாக்கி வைத்திருக்கும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும். அங்கே கல்யாணிக்கு வேலையில்லை. எந்த வேலை செய்தாலும் அதை நேர்த்தியாகச் செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். 



குடும்பம் குறித்து?

தாய்மொழி மலையாளம். சொந்த ஊர் கொல்லம். ஆனால் நாங்கள் குழந்தையாக இருக்கும் போதே  சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். என் அப்பா ஜி.கே. சுரேஷ் பைலட்டாக இருக்கிறார். அம்மா வீணா சுரேஷ், அவர்களும் கிளாசிக்கல் டான்ஸர். நான் ஒரே பெண்தான். என்னுடைய சின்ன வயதில் அம்மாவுடன் போய் டான்ஸ் புரோகிராம் எல்லாம் செய்வேன். அப்போதுதான் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்க வந்தேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.