முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வெளிநாட்டுக்காரர்கள் விரும்பிச் சாப்பிடுவது மசாலா தோசை!

நாம் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விழுந்தடித்துக் கொண்டு விரும்பிச் சாப்பிடுகிறோம். இத்தாலியின் பீட்ஸô நம்முடைய பாரம்பரிய உணவைப் போல ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ சென்

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:14 PM
பகிர்:

நாம் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை விழுந்தடித்துக் கொண்டு விரும்பிச் சாப்பிடுகிறோம். இத்தாலியின் பீட்ஸô நம்முடைய பாரம்பரிய உணவைப் போல ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் வெளிநாடுகளுக்கோ, வெளிமாநிலங்களுக்கோ சென்றால் மட்டும் நமது இட்லி, சாம்பார் எங்கே? எங்கே? என்று தேடிக் கொண்டிருப்போம்.

""ஆனால் வெளிநாட்டுக்காரர்கள் இங்கே வந்தால், விரும்பிச் சாப்பிடுவது நமது மசால்தோசையையும், இட்லி, சாம்பாரையும்'' என்கிறார் விபின் சச்தேவ்.

சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகரில் "பர்கன்டீஸ்' என்கிற பெயரில் உணவகம் நடத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

""நான் ஏற்கெனவே இத்தாலி, அமெரிக்க, கிரீஸ் உணவகங்களைச் சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறேன். எனவே உலகின் பெரும்பான்மையான நாடுகளில் உள்ள எல்லா வகையான உணவுகளும் ஓரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பர்கன்டீûஸ ஆரம்பித்தேன். பர்கன்டீஸ் என்றால் சுப்பீரியர் என்று அர்த்தம். எல்லாவிதங்களிலும் உயர்வாக இந்த ரெஸ்டாரெண்ட் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பெயர். இங்கே ஐரோப்பிய நாடுகளின் உணவு வகைகள், சீனா, ஜப்பான், மலேசியா, ஸ்பெயின், அமெரிக்க உணவு வகைகள் எல்லாம் கிடைக்கும்'' என்கிறார் அவர்.

இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்கள் திரைப்பட நடிகர், நடிகைகள். உயர்அதிகாரிகள். தொழிலதிபர்கள்.

""பொதுவாக பெரும்பாலான ரெஸ்டாரெண்ட்களில் ஒருநாளைக்கு எவ்வளவு உணவு தேவைப்படுமோ அவ்வளவையும் ஓரே நேரத்தில் தயார் செய்துவிடுவார்கள். நாங்கள் இங்கே இரண்டு மணி நேரத்துக்கும் மேல் எந்த உணவையும் வைத்திருப்பதில்லை. அந்த உணவு தீர்ந்துவிட்டால் மீண்டும் புதியதாகத் தயாரித்து அளிக்கிறோம்'' என்கிறார் பெருமையாக.

சிங்கப்பூரில் உள்ள "மீல் கெய்டு' என்ற அமைப்பு, ஆசியா முழுவதும் தனது குழுவினரை அனுப்பிச் சிறந்த ரெஸ்டாரெண்ட்களைத் தேர்ந்து எடுக்கப் பணித்தது. உணவு தயாரிப்பு, பரிமாறுதல், தூய்மை, ஆரோக்கியம், நிர்வாகம் என்று பல கோணங்களில் துருவித் துருவி ஆராய்ந்து அவர்கள் சிறந்த ரெஸ்டாரெண்ட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரெஸ்டாரெண்ட்களில் விபின் சச்தேவ் சென்னையில் நடத்தும் டஸ்கானா, கிரிப்டாஸ் ஆகிய இரண்டு ரெஸ்டாரென்ட்களும் அடக்கம்.

""உலக உணவு என்றதுமே நமது இந்திய உணவு இல்லை என்று நினைத்துவிடாதீர்கள். தென்னிந்திய, வட இந்திய உணவுவகைகளை தயாரித்து அளிக்கிறோம். சைவ, அசைவ உணவு வகைகள் எல்லாவற்றையும் மிகவும் சுவையாகத் தயாரிக்கிறோம். அதைவிட முக்கியமானது இந்த உணவகத்தில் நாங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக இங்குள்ள பீட்ஸô ஓவன் சுற்றக் கூடியது. பீட்ஸô தயாரிக்கும்போது அதை அவ்வப்போது புரட்டிப் போட வேண்டாம். இந்த மிஷினை இத்தாலியிலிருந்து கொண்டு வந்தேன். ஐரோப்பிய உணவு வகைகளை மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளும் இந்த உணவகத்தில் உள்ளன. அதுபோல உணவகத்தில் உணவு தயாரிக்கும்போது வரும் புகையை சுற்றுச் சூழலுக்குக் கேடு இல்லாதவாறு மாற்றி வெளியே விடும் இயந்திரத்தையும் பொருத்தியிருக்கிறோம்'' என்கிறார் விபின் சச்தேவ்.

இந்தப் பகுதியில் மேயர் ராமநாதன் திருமண மண்டபம் உள்ளது. திருமணத்துக்கு வருகிறவர்கள் உணவு பரிமாறப்படும் இடத்தில் கூட்டமாக இருந்தால், இந்த உணவகத்துக்கு குடும்பத்தோடு வந்துவிடுகிறார்களாம். தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளன. அங்கே வருகிற நடிகர், நடிகைகள், சின்ன திரைக் கலைஞர்களும் அடிக்கடி வருகின்றனர்.

உணவகத்துக்கு வெளியே திறந்த வெளிப் பூங்காவில் குடும்பத்துடன் சாப்பிட வந்தவர்களின் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். திறந்த வெளியிலும் உணவு பரிமாறப்படுகிறது. அந்தப் பகுதியில்தான் உணவகத்திலிருந்து வெளியே வரும் புகை வெளியே விடப்படுகிறது என்பதைச் சொல்லும்போது, நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →