பாலாவின் "அவன் இவன்' படத்தில் நடித்த ஜனனி ஐயர், நடிக்க வருவதற்கு முன்பு வாரம் தவறாமல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்போதே சில சினிமா புள்ளிகள் அவரை நடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அந்த வாய்ப்புகளையெல்லாம் மறுத்தவர், பாலா அழைத்தபோது உடனே நடிக்கச் சம்மதித்தார். படத்தில் அவருடைய கதாபாத்திரமும் சிறப்பாகப் பேசப்பட்டது. இதையடுத்து பிரபலமாகிவிட்ட ஜனனி, கபாலீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் ரசிகர்கள் ஆட்டோகிராஃப் கேட்டு அன்புத் தொல்லை தந்துள்ளனர். "கடவுளின் சந்நிதியில் அவர் ஒருவர் மட்டுமே பெரியவர். அந்த இடத்தில் ஆட்டோகிராஃபெல்லாம் கேட்டு என்னைப் பெரிய ஆளாக்காதீர்கள்' எனப் பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறார். ஆனால் ரசிகர்கள் விட்டபாடில்லை. அதனால் கபாலீஸ்வரர் சிலை ஒன்றை வாங்கி, அதைத் தன் வீட்டிலேயே வைத்து தினமும் பூஜை செய்யத் தொடங்கிவிட்டார்.
சென்னை, புரசைவாக்கத்தில் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எம்.சி.டி.எம். பள்ளி மாணவர்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனைச் சந்தித்து தங்களது கோரிக்கையைத் தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். என்ன போராட்டம்? ஏன் கமல்ஹாசனைச் சந்திக்க வேண்டும்? பாரம்பரியம் மிக்க அந்தப் பள்ளியை நிர்வாகம் மூடிவிட நினைக்கிறதாம். அதை எதிர்த்தே மாணவர்களின் போராட்டம். அந்தப் பள்ளியில் படித்த பலர் இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்களுள் ஒருவர் கமல். அவரிடம் முறையிட்டால் அவர் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பள்ளியைத் தொடந்து நடத்த உதவுவார் என்பதுதான் மாணவர்களின் நம்பிக்கை. மாணவர்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என நம்புவோம்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த "கோ' இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்து வசூலையும் வாரிக் குவித்தது. ஆனால் அதையடுத்து ஜீவா நடித்த "ரெüத்திரம்', "வந்தான் வென்றான்' படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் ஜீவா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். கெüதம் மேனன் இயக்கும் "நீதானே என் பொன்வசந்தம்' படத்துக்கு அதிகப்படுத்திய அவர், மிஷ்கின் இயக்கும் "முகமூடி' படத்துக்கு அதைவிடவும் அதிகமாகச் சம்பளம் பேசியுள்ளார். அடுத்து தன்னை அணுகும் தயாரிப்பு நிறுவனங்களிடமும் மூணுக்குக் குறைவாக சம்பளம் வாங்க மாட்டேன் எனக் கூறிவருகிறார்.
உதயன்' படத்தில் நடிக்கும்போதே ப்ரணிதா தமிழ்த் திரையுலகில் பெரிய அளவில் வலம் வருவார் என கோடம்பாக்கத்தில் பலரும் கட்டியம் கூறினர். அதோடு மட்டுமல்லாமல் பலர் சிறு தொகையை அட்வான்ஸôகக் கொடுத்து ஒப்பந்தமும் செய்துள்ளனர். ஆனால் தற்போது அவர்களது படங்களில் நடிக்க மறுத்து வருகிறார் ப்ரணிதா. அதற்குக் காரணம் கார்த்தியுடன் "சகுனி' படத்தில் ஜோடியாகச் சேர்ந்ததுதான். ""சகுனி' வெளிவந்த பிறகு எனது மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விடும்'' என்று உறுதியாக நம்புகிறார் ப்ரணிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.