ஞாயிறு கொண்டாட்டம்

நீதிமன்றத்தில் "நீதிநெறி'!

தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஏமாற்ற முயலாதீர்கள்; பிறர் நலனைக் குலைப்பதால் பெறும் ஆதாயம் நிலையில்லாதது.'' ""கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான்.'' ""விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை'' ""வணங்கும் கரங

எஸ்.தங்கவேல்

தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஏமாற்ற முயலாதீர்கள்; பிறர் நலனைக் குலைப்பதால் பெறும் ஆதாயம் நிலையில்லாதது.''

""கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான்.''

""விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை''

""வணங்கும் கரங்களை விட உதவும் கரங்களே மேலானவை''

""திறக்க முடியாத பூட்டும் இல்லை; தீர்க்க முடியாத பிரச்னையும் இல்லை. சமாதானத்துக்கு முயலுங்கள்''.

- என்ன ஒரே தத்துவ மழையாக இருக்கிறதே... என்று நினைக்கிறீர்களா?

சேலம் மாவட்டம், சங்ககிரியில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த நான்கு நீதிமன்றங்களும் ஒரே வளாகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமாக உருவெடுத்துள்ளன. புதிய கட்டடங்களுடன் மட்டும் இந்த நீதிமன்றங்கள் பணியைத் தொடங்கவில்லை. பல்வேறு வழக்குத் தொடர்பாக இந்த வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம் புதிய சிந்தனையை விதைக்கும் முயற்சியிலும் நீதித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

விசாலமான இடவசதி கொண்ட இந்த நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காண்போரை சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த வாசகங்களைத்தான் மேலே நீங்கள் படித்தீர்கள்!

வழக்குத் தொடர்பாக கோபதாபங்களுடன் வருவோரை சமாதானப்படுத்தும் விதமாக விட்டுக் கொடுத்துச் செல்வது குறித்தும், தம்பதியிடையே கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட மனக்கசப்பை நீக்கும் விதத்தில் அறிவுரைகளும், உரிமையை நிலைநாட்டப் போராடுங்கள்; பிரச்னையை தீர்க்க சமாதானமே சிறந்தது என்பன போன்ற கருத்துகளும் அதுதொடர்பான படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்துக்கு வந்து காத்திருக்கும் பொதுமக்கள் பார்வையில் படும் இக் கருத்துக்கள் அவர்கள் மனதில் சிறு மாற்றத்தை உருவாக்கும்; மன அழுத்தத்தை குறைக்கும் என்ற நோக்கில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் அனைத்து தளங்களில் இடம்பெற்றுள்ள இந்த வாசகங்களை இங்கு வருவோர் விரும்பிச் சென்று படிப்பதும் அதிகரித்துள்ளது. இது நீதித்துறையினரின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவும் கருதலாம்.

சங்ககிரி நீதித் துறையினரின் இந்தப் புதிய முயற்சியை பிறரும் பின்பற்றலாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT